அத்தியவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நபரொருவருக்கு 13,138 ரூபா

நபரொருவருக்கான அத்தியவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஒரு மாதத்திற்கு குறைந்த பட்ச செலவு Minimum Expenditure per person per month to fulfill the basic needs) 13,138 ரூபா என குடிசன மதிப்பீட்டு; புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2022 ஜூலை மாதத்திற்காக நபரொருவருக்கு மாதாந்த ஜீவனோபாயத்தையே இவ்வாறு திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதற்கிணங்க 2022 ஜூலை மாதத்தின் மதிப்பீட்டிற்கு இணங்க 4பேரைக் கொண்ட குடும்பத்திற்கு மாதமொன்றிற்கு குறைந்தது அத்தியவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 52,552ரூபா அவசியமாகும். அதேவேளை கொழும்பு மாவட்டத்தில் இதற்கு 56,676ரூபா தேவையாகும்.

இந்த மதிப்பீடானது ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஏற்றவாறு கணிப்பிடப்பட்டுள்ளதுடன், அதிக செலவு ஏற்படும் மாவட்டமாக கொழும்பு மாவட்டம் காணப்படுவதுடன் கொழும்பில்; வாழும் நபரொருவருக்கு ஏற்படும் செலவு 14,169 ரூபாவாகும்.

இதற்கிணங்க செலவு குறைந்த மாவட்டமாக மொனராகலை மாவட்டம் காணப்படுவதுடன், அங்கு நபரொருவருக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு 12,562ரூபா செலவாகும். 2022 ஜூன் மாதத்தில் இம்மதிப்பீடானது கொழும்பு மாவட்டத்தில் 13,421ரூபா ஆகவும், மொனராகலை மாவட்டத்தில் 11, 899ரூபா ஆகவும் காணப்பட்டது.

2022 ஜூலை மாதத்தில் அறிக்கையிடப்பட்ட அதிக தேசிய நுகர்வோர் விலைச் சுட்டி மதிப்பீடானது, மாதந்தம் அண்ணளவாக வறுமைக் கோடு அதிகரிப்பதற்குக் காரணமாகும் என குடிசன மதிப்பீட்டு, புள்ளிவிபரவியல் திணைக்களம் மேலும் தெரிவித்தது.

2022 ஜூலை மாதத்திற்கான அட்டவணை பின்வருமாறு:

 

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.