உலகளவில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மத்திய வங்கிகள் செய்வது அறியாமல் வெறும் வட்டி விகித உயர்வை மட்டுமே நம்பியிருக்கும் நிலை உருவாகியுள்ளது.
இதற்கிடையில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான OPEC அடுத்த சில வாரத்தில் எண்ணெய் விலையை உயர்த்த வேண்டும் என்பதற்காகவும் கூடுதல் வருமானத்தை ஈர்க்க வேண்டும் என்பதாகவும் எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கத் திட்டமிட்டு வருகிறது. இது மட்டும் நடந்தால் பணவீக்கம் மேலும் மோசமடையும்.
இந்த நிலையில் உலகின் முன்னணி ரேட்டிங் நிறுவனமான பிட்ச், உலகின் ரெசிஷன் எப்போது வரும்..? யார் முதலில் பாதிக்கப்படப்போவது என அறிவித்துள்ளது.
ஐடி பங்குகள் தடுமாற்றம்.. ரெசிஷன் அச்சம் அதிகரிப்பு..!
பிட்ச் ரேட்டிங்
ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டு உள்ள எரிவாயு நெருக்கடி, உயர் பணவீக்கம் மற்றும் உலகளாவிய நாணயக் கொள்கை இறுக்கத்தின் வேகம் ஆகியவை பொருளாதார வாய்ப்புகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று பிட்ச் ரேட்டிங்கிஸ் தனது செப்டம்பர் 2022 உலகளாவிய பொருளாதார அவுட்லுக் (GEO) அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஐரோப்பாவில் மொத்த எரிவாயு மற்றும் மின்சார விலைகள் கிட்டத்தட்ட 10 மடங்கு உயர்ந்துள்ளன.
பொருளாதார வளர்ச்சி
இந்நிலையில் பிட்ச் அமைப்பு சர்வதேச பொருளாதார வளர்ச்சியை 2022ல் 2.4 சதவீதமாக இருக்கும் எனக் கணித்துள்ளது. இது ஜூன் கணிப்பைக் காட்டிலும் 0.5 சதவீதம் குறைவாகும். இதேபோல் 2023ல் சர்வதேச பொருளாதார வளர்ச்சி 1 சதவீதம் குறைத்து வெறும் 1.7 சதவீதமாக இருக்கும் எனக் கணித்துள்ளது.
ரெசிஷன்
இதற்கிடையில் 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஐரோப்பிய யூனியன் மற்றும் பிரிட்டன் ரெசிஷனுக்குள் நுழையும், இதேபோல் 2023 முதல் பாதிக்குள்ள கட்டாயம் அமெரிக்காவும் ரெசிஷனுக்குள் தள்ளப்படும் எனப் பிட்ச் அமைப்பு கணித்துள்ளது.
சீனா
மேலும் உலகின் உற்பத்தி இன்ஜின் ஆக இருக்கும் சீனாவில் பொருளாதார வளர்ச்சிக்காக வட்டியைக் குறைத்தாலும் ரியல் எஸ்டேட் துறையில் உருவாகியுள்ள கடன் பெரும் தாக்கத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தும்.
முக்கியப் பிரச்சனை
கொரோனா ஏற்படுத்திய பாதிப்பை விடவும் ரஷ்யா – உக்ரைன் போர், எரிபொருள் விநியோக பாதிப்பு மற்றும் சீனா-வின் மந்தமான வர்த்தகம் மற்றும் உற்பத்தி உலகின் பொருளாதாரத்தைப் பெரிய அளவில் பாதித்துள்ளது.
மத்திய வங்கிகள்
இதன் மூலம் உலக நாடுகளில் உருவாகியுள்ள பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய வங்கிகள் வேகமாகவும், அதிகமாகவும் வட்டியை உயர்த்தி வருவதால் வர்த்தரம் மற்றும் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. ஆனால் பணப் புழக்கத்தை குறைக்க இதைவிட்டா வேறு வழி இல்லை.
Fitch ratings says Europe, UK, USA, China may enter into a recession by 2023 mid-year
Fitch ratings say Europe, the UK, may enter into a recession by 2022 end USA may enter into a recession by 2023 mid year; China into real estate trap