* மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்கள் கண்டெடுப்பு
* உறவினர்கள் போராட்டம்
லக்கிம்பூர்கேரி: உத்தரபிரதேச மாநிலத்தில் மரத்தில் தூக்கில் 2 தலித் சகோதரிகள் உடல்கள் பிணமாக கிடந்தன. குற்றவாளிகளை கைது செய்ய கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2 சிறுமிகளும் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விட்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் லால்பூர் மஜ்ரா தமோலி பூர்வா கிராமத்தில் வயல் பரப்பில் உள்ள ஒரு மரத்தில் 2 தலித் சிறுமிகள் தூக்கில் பிணமாக கிடப்பதாக நிகாசன் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனே போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையில் தகவலறிந்து 2 சிறுமிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், கிராம மக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். உடல்களை பார்த்து கதறி அழுதனர். போலீசார், அந்த 2 உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி ைவத்தனர். இதற்கிடையில் இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி 2 சிறுமிகளின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ‘2 சிறுமிகளும் கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரையில் கலைந்து செல்ல மாட்டோம்’ என்று போராட்டக்காரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தகவலறிந்து லக்கிம்பூர் கேரி எஸ்பி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ‘குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 2 உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த அறிக்கை கிடைத்ததும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர், போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அரசியல் புயலை கிளப்பியுள்ளது. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு கேள்வி குறியாகியுள்ளது என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடியுள்ளன. இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வதேரா கடும் கண்டனம் தெரிவித்தார். மாநில அரசை கடுமையாக சாடினார். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு கேள்விகுறியாகி உள்ளது என்றார். மேலும் அவர், ‘லக்கிம்பூரில் 2 சகோதரிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது.
பட்டப்பகலில் சிறுமிகள் கடத்தப்பட்டதாக உறவினர்கள் கூறுகின்றனர். பொய்யான விளம்பரங்கள் சட்டம்-ஒழுங்கை மேம்படுத்தாது. எல்லாவற்றிற்கும் மேலாக, உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்கள் ஏன் அதிகரித்து வருகிறது?’ என்றார். யோகி அரசில், தாய்மார்கள் மற்றும் சகோதரிகளை குண்டர்கள் தினமும் துன்புறுத்துகிறார்கள், இது மிகவும் வெட்க கேடானது. இந்த சம்பவத்தை அரசு தீவிரமாக விசாரிக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும்’ என்று சமாஜ்வாதி கட்சி ட்வீட் செய்துள்ளது.
கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் போராட்டத்தின் புகைப்படங்களை ட்வீட் செய்துள்ளார். பிரேத பரிசோதனை அனுமதியின்றியும், நடைமுறையை மீறியும் நடந்ததாக சிறுமியின் தந்தை அந்த பதிவில் குற்றம் சாட்டியுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறுகையில், ‘உத்தரபிரதேசத்தில் குற்றவாளிகளுக்கு அச்சம் இல்லை, ஏனெனில் அரசின் முன்னுரிமைகள் தவறாக உள்ளன. லக்கிம்பூர் கேரியில் நடந்த சம்பவம், சட்டம்- ஒழுங்கை பராமரிப்பது மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்த மாநில அரசின் கூற்றுக்களை அம்பலப்படுத்துகிறது’ என்றார்.
சட்டம்-ஒழுங்கு கேள்வி குறி; எதிர்க்கட்சிகள் தாக்கு
இந்த சம்பவம் அரசியல் புயலை கிளப்பியுள்ளது. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு கேள்வி குறியாகியுள்ளது என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடியுள்ளன.
இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வதேரா கடும் கண்டனம் தெரிவித்தார். மாநில அரசை கடுமையாக சாடினார். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு கேள்விகுறியாகி உள்ளது என்றார். மேலும் அவர், ‘லக்கிம்பூரில் 2 சகோதரிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது. பட்டப்பகலில் சிறுமிகள் கடத்தப்பட்டதாக உறவினர்கள் கூறுகின்றனர். பொய்யான விளம்பரங்கள் சட்டம்-ஒழுங்கை மேம்படுத்தாது.
எல்லாவற்றிற்கும் மேலாக, உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்கள் ஏன் அதிகரித்து வருகிறது?’ என்றார்.யோகி அரசில், தாய்மார்கள் மற்றும் சகோதரிகளை குண்டர்கள் தினமும் துன்புறுத்துகிறார்கள், இது மிகவும் வெட்க கேடானது. இந்த சம்பவத்தை அரசு தீவிரமாக விசாரிக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும்’ என்று சமாஜ்வாதி கட்சி ட்வீட் செய்துள்ளது. கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் போராட்டத்தின் புகைப்படங்களை ட்வீட் செய்துள்ளார்.
பிரேத பரிசோதனை அனுமதியின்றியும், நடைமுறையை மீறியும் நடந்ததாக சிறுமியின் தந்தை அந்த பதிவில் குற்றம் சாட்டியுள்ளார்.பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறுகையில், ‘உத்தரபிரதேசத்தில் குற்றவாளிகளுக்கு அச்சம் இல்லை, ஏனெனில் அரசின் முன்னுரிமைகள் தவறாக உள்ளன. லக்கிம்பூர் கேரியில் நடந்த சம்பவம், சட்டம்- ஒழுங்கை பராமரிப்பது மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்த மாநில அரசின் கூற்றுக்களை அம்பலப்படுத்துகிறது’ என்றார்.