போடிமெட்டு புலியூத்து அருவியில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்; அணிவகுக்கும் சுற்றுலா பயணிகள்

போடி: போடிமெட்டு மலைச்சாலையில் உள்ள புலியூத்து அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரை ரசிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அணிவகுத்து நிற்கிறது. தமிழகத்திலிருந்து மூணாறு செல்ல போடி- முந்தல் ரோட்டிலிருந்து 22 கி.மீ., துாரத்தில் 17 கொண்டை ஊசி வளைவுகளுடன் கடல் மட்டத்திலிருந்து 4 ஆயிரத்து 644 அடி உயரத்தில் போடி மெட்டு மலைச்சாலை உள்ளது. இந்த மலைச்சாலையையொட்டி இருபுறங்களிலும் அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது. மேலும், ஏலக்காய், தேயிலை, காப்பி, மிளகு தோட்டங்களும் இருப்பதால் பார்ப்பதற்கு ரம்மியாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் கடந்த ஜூன் முதல் வாரத்திலேயே தென்மேற்கு பருவ மழை துவங்கியதால் இப்பகுதி முழுவதும் குளுமையான சீதோஷ்ண நிலையில் தொடர்ந்து வருகிறது.

இந்த மலைச்சாலையில் 7வது கொண்டை ஊசி வளைவுக்கு மேல் புலியூத்திலிருந்து, பல இடங்களில் இயற்கை அருவிகள் உள்ளது.இந்த பகுதியில் உள்ள புலியூத்து அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது இந்நிலையில், தமிழகத்திலிருந்து போடிமெட்டு வழியாக கேரளா மாநிலம் மூணாறு, ராஜமலை, டாப் ஸ்டேஷன் என சுற்றுலா ெசல்லும் சுற்றுலா பயணிகள் பலரும் இந்த புலியூத்து அருவியை பார்த்து ரசிக்காமல் செல்வதில்லை. மேலும், அருவி முன்பு நின்று செல்பி மற்றும் குரூப் போட்டோ எடுத்தும், சிலர் குளித்தும் மகிழ்ந்கின்றனர். இதனால், போடிமெட்டு மலைச்சாலை முழுவதும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அணிவகுத்து நிற்பது வாடிக்கையாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.