ஆனந்த விகடன் மற்றும் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி முகாம் சென்னையில் நடைபெறவிருக்கிறது. சிவில் சர்வீஸ் மற்றும் TNPSC போட்டித்தேர்வுகளுக்கு சரியான முறையில் தயாராவது எப்படி என்பதில் தொடங்கித் தேர்வு நுணுக்கங்கள், செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கு துறை நிபுணர்கள் பதிலளிக்க உள்ளனர்.
ஐஏஎஸ் தேர்வுக்கென நான் தனியாக எந்த கோச்சிங் சென்டரும் போய் படிக்கவில்லை. கல்லூரி படிக்கும்போதே ஐஏஎஸ் தேர்வுக்கும் படித்தேன். ஆன்லைனில் ஐஏஎஸ் தேர்வுக்குப் படிக்கவேண்டிய புத்தகங்கள் மற்றும் தகவல்கள் எல்லாவற்றையும் தொடர்ந்து தேடிக்கொண்டே இருப்பேன். இதற்கு முன் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றவர்கள் யூடியூப்-ல் பேசிய வீடியோக்கள் பார்ப்பது, பத்திரிகை நேர்காணல்கள் எல்லாவற்றையும் படிப்பது என ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் அனுபவங்களைத் தெரிந்துக்கொண்டேன். அதன் மூலமே என்னென்ன புத்தகங்கள் படிக்க வேண்டும் என்ற தகவல்கள் எல்லாம் எனக்குத் தெரிந்தது. பின் புத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி கல்லூரி இறுதி ஆண்டிலிருந்து வீட்டிலிருந்தபடியே தேர்வுக்குத் தயாராகி வந்தேன். கல்லூரிப் படிப்பை முடித்ததும் ஐஏஎஸ் முதல்நிலை தேர்வு எழுதினேன். முதல் முயற்சியிலேயே தேர்ச்சியும் பெற்றேன். அடுத்த இரண்டு மாதத்தில் மெயின் தேர்வு அதற்கும் நானாகவே தான் தயாரானேன். அடிக்கடி எழுதி எழுதி பார்ப்பேன். எழுதியதை ஏற்கெனவே ஐஏஎஸ் தேர்ச்சி பெற்ற என் நண்பர்களிடம் கொடுத்து சரிபார்த்துக் கொள்வேன். மெயின் தேர்விலேயும் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றேன்.
அடுத்தது நேர்காணல் ஏற்கெனவே நேர்காணலுக்குச் சென்று வந்த அனுபவம் கொண்ட சீனியர்கள்,அலுவலர்களிடம் நேர்காணல் எப்படி நடைபெறும் அதற்கு எப்படி தயாராவது என்பது பற்றியெல்லாம் அறிந்துக்கொண்டு நானும் நேர்காணலுக்கென தனியே பயிற்சிகளை மேற்கொண்டு தயாராகி வந்தேன். நேர்காணலிலும் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றேன். எனது 22 ஆம் வயதில் இந்திய அளவில் 34-வது ரேங்க் வாங்கி ஐஏஎஸ் தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றேன். அப்போதும் நான் விகடனுக்கு நேர்காணல் கொடுத்திருந்தேன் என்பதை நினைவுக்கூர்ந்தார். ஐஏஎஸ் தேர்வுக்குத் தயாரவதும், படிப்பதும் மிகவும் கடினம் என்று நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி நினைத்துக் கொண்டு நிறைய பேர் தேர்வு எழுத முயற்சிகூட செய்து பார்ப்பதில்லை. அப்படியல்ல, தேர்வுக்கு சரியாகத் திட்டமிட்டு, கடின உழைப்புடன் படித்தால் யாராக இருந்தாலும் எளிமையாக ஐஏஎஸ் தேர்ச்சி பெறலாம். இதை பெரிய இமாலய வேலை அளவுக்கு கடினமாக எடுத்துக் கொள்ளாமல் சாதாரணமாக ஒரு தேர்வு; அதற்கு ஒரு வருடம் கடின உழைப்புடன் சரியான முறையில் திட்டமிட்டு படித்தால் ஐஏஎஸ் என்ற கனவு இலக்கை எளிதாக அடையலாம். இதை மாணவர்கள் அனைவரும் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
தேர்வுக்குத் தயாராகும்போது எனக்கும் நிறைய சிக்கல்கள் வந்தன. ஐஏஎஸ் தேர்வு பாடத்திட்டம் அதிகமாக இருக்கும். நிறைய படிக்க வேண்டியது இருக்கும். பல நேரங்களில் மனரீதியான பிரச்னைகள் வரும். தேர்வுக்குத் தயாராகும்போது சோர்வும் ஏற்படும். நிறைய படித்துக்கொண்டே இருக்கவேண்டியிருக்கும். அந்த நேரத்தில் நம்மால் தேர்வு நன்றாக எழுதி தேர்ச்சி பெற முடியுமா? என்ற எண்ணமும் கூட ஏற்படும். இந்த மாதிரியான பிரச்னைகளை நான் நிறைய எதிர்கொண்டேன். அந்த மாதிரியான சூழ்நிலைகளில் நண்பர்கள் மற்றும் பெற்றோர்கள்தான் என்னை ஊக்கப்படுத்தினர்.சில சமயம் நம்மால் தேர்வில் நிச்சயம் தேர்ச்சி பெற முடியும் என்று என்னை நானே திடப்படுத்திக்கொண்டு மீண்டும் தேர்வுக்கு படிக்க ஆரம்பிப்பேன்.அப்படி முயற்சி செய்து படித்ததன் மூலம் தான் என்னால் முதல் முயற்சியிலேயே ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற முடிந்தது” என்று தனது அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார்.
மேலும் ஐஏஎஸ் தேர்வுக்கு எப்படி தயாராவது,எவ்வாறு திட்டமிட வேண்டும்,தேர்வுக்குத் தயாராகும்போது ஏற்படும் சவால்களை எப்படி எதிர்கொள்வது போன்ற அனைத்து சந்தேகங்களுக்கும் வழிகாட்டும் படியாக வரும் 25 -09 – 2022, ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெறும் ஆனந்த விகடன் மற்றும் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி முகாமில் இன்னும் விரிவாக பேச இருக்கிறார் அருண்ராஜ் ஐஏஎஸ்…
இன்னும் பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கலந்துக்கொண்டு உரையாற்ற இருக்கும் பயிற்சி முகாமில் கலந்துக் கொள்ள கீழே உள்ள லிங்க்கை கிளிக்கில் பதிவு செய்யவும்..
இந்த பயிற்சி முகாமில் கலந்துக் கொள்ள கட்டணம் எதுவும் இல்லை. அனுமதி இலவசம்.