திமுகவின் மாநில துணைப் பொதுச்செயலாளராக முன்னாள் ம்த்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அவர் பாஜக வேட்பாளர் சி.ஆர்.சரவஸ்வதியுடம் தோல்வியடைந்தார். சுப்புலட்சுமி வெற்றி பெற்றிருந்தால் அவர் தான் சட்டப்பேரவை சபாநாயகர் என
வட்டாரங்கள் கூறி வந்தது.
அப்படி கட்சியில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நபராக உள்ள சுப்புலட்சுமி தற்போது பல்வேறு புகார்களில் சிக்கியுள்ளதாக தெரிகிறது. அதற்கான காரணம் அவரது கணவர் ஜெகதீசன் தான் என்றாலும் சுப்புலட்சுமிக்கு எதிராகவே அம்புகள் வீசப்படுகின்றன.
திமுகவின் தீவிர விசுவாசியான ஜெகதீசன் சொந்த கட்சியை கடுமையாக விமர்சிப்பது வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார். செப்டம்பர் 11-ம் தேதி சென்னையில் மாமனிதன் வைகோ என்ற ஆவண படத்தை முதல்வர்
வெளியிட்டு வைகோவை புகழ்ந்து பேசினார்.
வாரிசு பிரச்சனையை கையில் எடுத்த வைகோ திமுகவை விட்டு வெளியேறி பலருடன் மதிமுகவை தொடங்கினார். பல ஆண்டுகளுக்குப் பிறகு கருணாநிதி தனது கனவில் வந்ததாக கூறி 2018 கருணாநிதியை சந்தித்து பேசினார். திமுகவில் இருந்து வைகோ வெளியேறியதை மறந்து அவருடன் நட்பு பாராட்டுவதை சுப்புலட்சுமி கணவர் ஜெகதீசன் தனது பேஸ்புக் பக்கத்தில் கடுமையாக விமர்சித்து இருந்தார்.
அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது “வெட்கமில்லை மானமில்லை நடத்துராஜா நேரம் எப்படி மாறி இருக்குது பாரு ராஜா. துரோகத்தை எதிர்த்து அன்று கருணாநிதிக்கு ஆதரவாக நின்றவர்கள் நிலை என்ன ராஜா. வெட்கம், மானம், ரோசம், மரியாதை, சூடு, சொரணை எனக்கு உள்ளது என்ன செய்ய உடன்பிறப்பே” என விமர்சித்துள்ளார்.
அதுபோல் மற்றொரு பதிவில் “2016 ஆம் ஆண்டு நால்வர் அணிக்கு தலைமை ஏற்ற வைகோ பேசிய, ஏசிய உரைகள் எல்லாம் ஞாபகம் வரவில்லையா. அதை உணராமல் விமர்சிக்கும் என்னை திட்ட வெட்கமாக இல்லையா உமக்கு என கேள்வி எழுப்பியுள்ளார். அதுபோல் இன்னொரு பதிவில் லஞ்சம் இல்லாத தமிழ்நாட்டு அரசில் ஒரு துறையை சொன்னால் ஒரு கோடி ரூபாய் பரிசளிக்கலாம் இயலுமா என் தோழா” என தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அமைச்சர் உளறுகிறார் – வீரமணி விமர்சனம்
அண்மையில் நடந்த அமைச்சர் மூர்த்தி வீட்டு திருமணத்தை, ஜெயலலிதா தனது வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு செய்த திருமணத்துடன் ஒப்பிட்ட ஜெகதீசன், அழிவின் விளிம்பை நோக்கி… என பதிவிட்டு அவர் வீட்டில் வைக்கப்பட்ட விருந்து, மொய் விருந்து குறித்து எல்லாம் விமர்சனம் செய்துள்ளார்.
அதுபோல் மின்சார கட்டண உயர்வு குறித்து ஜெகதீசன் பதிவிடுகையில் வாங்கிய பணத்தை செலவிட முடியாமல் தன்னுடைய எங்களுக்கு மின் கட்டணத்தை உயர்த்திய முதல்வருக்கு நன்றி என கிண்டலாக பதிவிட்டுள்ளார். பேஸ்புக்கில் தன்னை பற்றிய சுய குறிப்பில் போற்றுவோர் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும். ஏற்றதொரு கருத்தை சரி என்றால் பதிவிடுவேன் என குறிப்பிட்டுள்ளார் ஜெகதீசன்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
திமுகவில் தனது மனைவி முக்கிய பதவியில் இருக்கிறார் என்பதையே மறந்து திமுக தலைவரையே ஜெகதீசன் விமர்சிக்கும் போக்கு குறித்து மொடக்குறிச்சியை சேர்ந்த திமுகவினர் தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளனர். இது ஒரு புறம் இருக்க சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது கணவரின் பதிவுகள் குறித்து கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருப்பது அவர் நொந்துபோயுள்ளதை வெளிப்படுத்துவதாக உடன்பிறப்புகள் தெரிவிக்கின்றனர்.