சென்னை: இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் நடிகர் சிலம்பரசன், நடிகை சித்தி இத்னானி நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் படம் வெந்து தணிந்தது காடு.
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள நடிகை சித்தி இத்னானி நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.
நன்றாக பாடுவேன்
கேள்வி: உங்களுக்கு பிடித்த விஷயம் என்னென்ன?
பதில்: நான் ஒரு ஸ்போர்ட்ஸ் கேர்ள். பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் போது ஸ்டேட் லெவல் த்ரோ பால் பிளேயர். 2008ம் ஆண்டு மேட்சில் கலந்துகொள்வதற்காக நான் சென்னை வந்திருக்கேன். கல்லூரி படிப்பு முடிந்த பிறகு மாடலிங் அதனைத் தொடர்ந்து சினிமாவுக்கு வந்தேன். விளையாட்டு மட்டுமின்றி, பாடவும் தெரியும் என்றார்.
கலர்புல்லாக இருப்பேன்
கேள்வி: உங்களுக்கு பிடித்த கேமராமேன்கள் யார்?
பதில்: நான் நடித்த படங்களில் பணியாற்றிய இரண்டு கேமராமேன்களையும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு கோடி வானம் திரைப்படத்தின் கேமராமேன் பிரசன்னா என்னை ரொம்பவும் கலர்ஃபுல்லா காட்டியிருப்பார். வெந்து தணிந்தது காடு படத்தின் கேமரா மேன் சித்னுனி நிறைய தனித்தன்மை கொண்டவர். எதிர்காலத்தில் பி.சி.ஸ்ரீராம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை.
இந்த டிரஸ்சில் அழகாக இருப்பேன்
கேள்வி: உங்களுக்கு எந்த மாதிரியான ஆடை பிடிக்கும்?
பதில்: டிரஸ்ஸிங் பத்தி சொல்லனும்னா எனக்கு இந்திய ஆடைகளை குறிப்பாக சேலை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஸ்விம்மிங் டிரஸ், ஷார்ட் ஸ்கர்ட் மாதிரி எனக்கு கம்ஃபோர்ட்டா இருக்கற டிரஸ் எனக்குப் பிடிக்கும். பொருத்தமான உடைகள் அணியும் போது நம்பிக்கை கிடைக்கும். அதனால் அழகாகவும் இருக்கும் என்றார். மேலும் அவர் கூறுகையில், நான் ஒரு பப்பி வளர்க்கிறேன். அதோட பேர் விஸ்கி. ஃபேஸ்புக்கில் இருக்கின்ற அந்த ஃபோட்டோ எடுக்கும் போது விஸ்கிக்கு உடம்பு சரியில்ல. அதனால் அதனை தூக்கி கொஞ்சும்போது எடுத்த ஃபோட்டோ. இப்ப சோஷியல் மீடியாவில வைரலாகியிருக்கு என்றார்.
சூப்பரா இருந்துச்சி
கேள்வி: தமிழ் சினிமாவில், எந்த நடிகைக்கு காஸ்ட்யூம் நன்றாக இருப்பதாக கருதுகிறீர்கள்?
பதில்: தமிழ் சினிமாவில் நயன்தாராவுக்கு எல்லா உடைகளும் ரொம்ப பொருத்தமாக இருக்கும். காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாரா, சமந்தா ரெண்டு பேருக்கும் காஸ்ட்யூம் ரொம்ப அருமையாக இருக்கும் என்றார்.
திருமணம் எப்படி?
கேள்வி: கற்பனை கதை ஏதாவது கூறுங்கள்…
பதில்: என்னுடைய கற்பனை கதையில், நடிகர் சிலம்பரசனும், நானும் பள்ளிக் கூட காதலர்களாகவும், எனது அப்பாவாக நடிகர் ரஜினிகாந்தும், நடிகர் உதய நிதி ஸ்டாலின் சிம்புவின் அண்ணனாகவும் இருக்க வேண்டும். இறுதியில் உதயநிதி ஸ்டாலினும், நடிகர் ரஜினியும் இணைந்து எங்களுக்கு திருமணம் செய்து வைத்தால் நன்றாக இருக்கும் என்றார் ஜாலியாக. மேலும் ரஜினி படத்தில் நடிக்கின்ற வாய்ப்பு கிடைத்தால், ஈ மாதிரி ரோல் கிடைச்சாலும் சந்தோஷமாக செய்வேன். ரஜினி எவ்வளவு பெரிய நடிகர். ஆனாலும் எப்பவும் ரொம்ப எளிமையான வேஷ்டி சட்டையில் வருவார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/k07XsA9D3sM இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். பில்மிபீட் ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் வினோத் மற்றும் நடிகை சித்தி இதனானி இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளனர். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்.