டாடா குழுமத்தின் 5 ஆண்டு திட்டம்.. மீண்டும் மகாராஜா-வாக மாறும் ஏர் இந்தியா..!

இந்திய அரசு கட்டுப்பாட்டில் இருந்த ஏர் இந்தியா விமானச் சேவை நிறுவனத்தை டாடா குழுமம் மீண்டும் மகாராஜா அந்தஸ்து-க்குக் கொண்டு வர முயற்சியில் தீவிரமாக உள்ளது.

டாடா குழுமத்தின் நிர்வாகம் ஏற்கனவே ஏர் இந்தியாவில் பல முக்கியமான மாற்றங்களைக் கொண்டு வந்தது. இதன் மூலம் ஏர் இந்தியா மீதான நம்பிக்கை மற்றும் விருப்பம் அதிகரித்து ஏர் இந்தியாவின் வர்த்தகமும் அதிகரித்து.

இந்த நிலையில் தான் அடுத்த கட்ட வளர்ச்சிக்காக டாடா குழுமம் ஏர் இந்தியாவுக்குக் கேம்பிள் வில்சன்-ஐ சீஇஓ-வாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் ஏர் இந்தியா புதிதாக 5 ஆண்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

புதிய வர்த்தகத்தில் இறங்கும் டாடா குழுமம்.. அடடே இது நல்லா இருக்கே..!

ஏர் இந்தியா

ஏர் இந்தியா

ஏர் இந்தியா நிறுவனத்தை மத்திய அரசிடம் இருந்து கைப்பற்றிய பின்பு ஊழியர்கள் முதல் நிர்வாகம் வரையில் பல முக்கியமான மாற்றங்களைச் செய்தது மட்டும் அல்லாமல் உபரியாக இருக்கும் ஊழியர்களைப் பல வழிகளில் குறைத்தும், மறு சீரமைப்பும் செய்தது.

முக்கியக் காரணிகள்

முக்கியக் காரணிகள்

இந்த நிலையில் ஏர் இந்தியா வியாழக்கிழமை வளர்ந்து வரும் தனது நெட்வொர்க் மற்றும் விமானங்களில் கவனம் செலுத்தவும், அதன் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தவும், வாடிக்கையாளர் மத்தியில் நம்பகத்தன்மை அதிகரிக்கவும், ஆன்-டைம் சேவையை மேம்படுத்தவும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

Vihaan.AI திட்டம்
 

Vihaan.AI திட்டம்

ஏர் இந்தியா Vihaan.AI என்ற விரிவான மாற்றத்திற்கான 5 ஆண்டுத் திட்டத்தை இன்று வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் அடுத்த 5 ஆண்டில் உள்நாட்டு விமானச் சேவையில் 30 சதவீத வர்த்தகத்தையும், வெளிநாட்டுச் சேவையில் குறிப்பிடத்தக்க வர்த்தகத்தையும் பெற இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

 5 ஆண்டுத் திட்டம்

5 ஆண்டுத் திட்டம்

இந்த Vihaan.AI என்ற 5 ஆண்டுத் திட்டத்தை ஊழியர்களிடம் இருந்து பெறப்பட்ட முக்கியமான பீட்பேக் வாயிலாகவும், நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவும் ஆய்வு செய்து உருவாக்கப்பட்டு உள்ளது. இது தான் ஏர் இந்தியாவின் மிகப்பெரிய மாற்றத்திற்கான துவக்கம் என்பதைக் கேம்பிள் வில்சன் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Tata group’s fresh 5-year plan Vihaan.AI to make Air India Maharaja again

Tata group charted fresh 5-year plan Vihaan.AI for Air india to make Maharaja again in domestic and international airline services

Story first published: Thursday, September 15, 2022, 20:16 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.