அடுத்தடுத்து சிக்சராக அடித்து தள்ளும் வேதாந்தா.. ஒடிசாவிலும் ரூ.25,000 கோடி முதலீடு!

மும்பை: தூத்துக்குடியில் இருந்து வெளியேறிய வேதாந்தா நிறுவனம் குஜராத் அரசுடன் இணைந்து, குஜராத்தில் செமிகண்டக்டர் மற்றும் மின்னணு சாதன உற்பத்தியில் ஈடுபடவுள்ளதாக சில தினங்களுக்கு முன்பு தான் அறிவித்தது.

தற்போது ஓடிசாவில் புதியதாக 25,000 கோடி ரூபாய் முதலீட்டினை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஏற்கனவே 80,000 கோடி ரூபாய் முதலீட்டினை கொண்டுள்ள வேதாந்தா, மீண்டும் அம்மாநிலத்தில் அலுமினியம் மற்றும் ஃபெரோக்ரோம் மற்றும் சுரங்க வணிகத்தினை விரிவாக்கம் செய்யும் பொருட்டு இந்த முதலீட்டினை அறிவித்துள்ளது.

1.54 லட்சம் கோடி முதலீடு அறிவிப்பால் வேதாந்தா பங்குகள் 10% உயர்வு..!

 ஜிடிபியில் முக்கிய பங்கு

ஜிடிபியில் முக்கிய பங்கு

வேதாந்தாவின் முதலீடு மற்றும் செயல்பாட்டின் மூலம் ஒடிசாவின் ஜிடிபி-யில் நேரடியாக கிட்டதட்ட 4% பங்கு வகிக்கும் என அறிவித்துள்ளது. இதன் மூலம் பல ஆயிரம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பினையும் பெறுவர்.

பல லட்சம் பேருக்கு வாய்ப்பு

பல லட்சம் பேருக்கு வாய்ப்பு

ஒடிசாவின் முதலமைச்சர் நவீன் பட்நாயக், வேதாந்தாவின் தலைவர் அனில் அகர்வாலுடன் மும்பையில் நடந்த மேக் இன் ஓடிசா 2022 கூட்டம் நடந்தது. வேதாந்தா நிறுவனம் பல நூற்றுக்கணக்கான எம் எஸ் எம் இ-களுக்கு வாழ்வளித்து வருகின்றது. 5 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகவும் அகர்வாலை மேற்கோள் காட்டி சுட்டி காட்டியுள்ளது.

வேலை வாய்ப்பு
 

வேலை வாய்ப்பு

இந்தியாவில் மிக சாதகமான முதலீட்டு தளங்களில் ஓடிசாவும் ஒன்று. அரசின் நிலையான தொலை நோக்கு பர்வையால் வழி நடத்தப்படுகிறது. இம்மாநிலம் ஈஸி ஆஃப் டூயிங்க் லிஸ்டிலும் இடம் பெற்றுள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் தான் நிறுவனம் மேற்கொண்டு 25,000 கோடி ரூபாயினை மேற்கொண்டு ஒடிசாவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இன்னும் ஏராளமானவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க முடியும் என வேதாந்தா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

குஜராத் நிலவரம்

குஜராத் நிலவரம்

முன்னதாக சில தினங்களுக்கு முன்பு தான் வேதாந்தா நிறுவனம் பாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து குஜராத் மாநிலத்தில் முதலீடு செய்ய தேர்வு செய்துள்ளது. இதற்காக குஜராத் அரசுடன் 1.5 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 2 லட்சம் இளைஞர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு கிடைக்கும் என குஜராத் அரசு தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Vedanta plans to invest Rs.25,000 crore in Odisha

Vedanta plans to make a new investment of Rs 25,000 crore in Odisha.

Story first published: Thursday, September 15, 2022, 19:28 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.