புனித நூலுடன் இந்தியா புறப்பட்ட சீக்கியர்கள்.. தடுத்து நிறுத்திய தாலிபான்கள்.. என்ன காரணம்?

அமிர்தசரஸ்: ஆப்கானிஸ்தானில் இருந்து சீக்கியர்கள் பலர் வெளியேறி வரும் நிலையில், புனித நூலுடன் செல்லும் சீக்கியர்களுக்கு வெளியேற அனுமதி கிடையாது என்று அவர்களை ஆப்கானிஸ்தான் தடுத்து நிறுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஓராண்டுக்கு மேலாக தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது.

கடுமையான சட்ட திட்டங்களை அமல்படுத்தி ஆட்சி நடத்தி வரும் தாலிபான்கள் பெண்கள் உயர் கல்வி கற்க தடை உள்ளிட்ட மிகக்கடுமையான சட்டதிட்டங்களை அமல்படுத்தி வருகின்றனர்.

சீக்கியர்களுக்கு அனுமதி மறுப்பு

தாலிபான்கள் ஆட்சியில் நாடு முழுவதும் பல இடங்களில் வறுமை தாண்டவம் ஆடுவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி ஆப்கானிஸ்தானில் கொடுங்கோல் ஆட்சியை தாலிபான்கள் நடத்தி வருவதாக அடிக்கடி செய்திகள் உலா வரும் நிலையில் அதை மெய்ப்பிக்கும் வகையில், தாலிபான்களின் ஒரு நடவடிக்கை அமைந்துள்ளது. இந்தியாவுக்கு புனித பயணமாக வர இருந்த சீக்கியர்கள் 60 பேரை தாலிபான்கள் தடுத்து நிறுத்தி அனுமதி மறுத்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்

இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்

கடந்த 11 ஆம் தேதி இந்தியாவுக்கு வரும் திட்டத்துடன் கிளம்பிய சீக்கியர்கள் 65 பேரையும் தடுத்து நிறுத்திய தலிபான்கள், அவர்களிடம் சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாகிப் இருந்ததால் அனுமதி மறுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி (SGPC), இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு சீக்கியர்களின் உணர்வுகள் புண்படாத படி உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

புனித நூலை எடுத்துவர அனுமதி மறுப்பு

புனித நூலை எடுத்துவர அனுமதி மறுப்பு

இது தொடர்பாக சிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- ”சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாகிப்பை ஆப்கானிஸ்தானை விட்டு வெளியே எடுத்து வர அனுமதி மறுத்த தாலிபான்களின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. 60 சீக்கியர்கள் கடந்த 11 ஆம் தேதியே இந்தியா வந்திருக்க வேண்டியது. ஆனால், புனித நூலை எடுத்துவர அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்களால் வர முடியவில்லை. சீக்கியர்களின் மத விவகாரங்களில் தாலிபான்களின் நேரடி தலையீடு இதுவாகும்.

சீக்கியர்கள் மீது தாக்குதல்

சீக்கியர்கள் மீது தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் ஒருபக்கம் சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் நிலையில் மற்றொரு புறம் தங்களின் புனித நூலை இந்தியாவுக்கு எடுத்துவர அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று உணர்ந்த காரணத்தினாலேயே அந்நாட்டை விட்டு சீக்கியர்கள் வெளியேறி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள் வசிக்காத பட்சத்தில் ஸ்ரீ குரு கிராந்த் ஷாகிப் ஜி புனித நூலை யார் பாதுகாப்பார்கள்” என்றார்.

மத உணர்வுகளை புண்படுத்தும்..

மத உணர்வுகளை புண்படுத்தும்..

மேலும் அவர் கூறுகையில், ‘இத்தகைய காரணங்களுக்காக மட்டுமே தங்களின் புனித நூலை சீக்கியர்கள் தங்களுடன் இந்தியாவுக்கு எடுத்து வருகின்றனர். எனவெ, சீக்கியர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் தாலிபான்கள் நடந்து கொள்ளக்கூடாது’ என்றார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.