தங்கம் (gold price) விலையானது கடந்த சில அமர்வுகளாக தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. இன்றும் சர்வதேச சந்தையில் சற்று குறைந்துள்ளது. இது இன்னும் குறையலாமோ என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது.
தங்கத்தில் செல் ஆஃப் அதிகரித்துள்ள நிலையில், தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது.
இதற்கிடையில் இன்று சர்வதேச சந்தை நிலவரம் என்ன? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கம் விலை நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
பலத்த சரிவுக்கு பிறகு இன்றும் சரிந்த தங்கம் விலை.. எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா?
தங்கம் விலை சரிவு
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது மூன்றாவது நாளாக இன்றும் சரிவில் காணப்படுகின்றது. இது அமெரிக்காவின் பணவீக்க தரவினை தொடர்ந்து அமெரிக்க டாலரின் மதிப்பானது அதிகரித்து வரும் நிலையில், பத்திர சந்தையும் ஏற்றம் கண்டு வருகின்றது. இதற்கிடையில் வட்டியில்லா முதலீடான தங்கம் விலையானது சரிவில் காணப்படுகின்றது.
இன்றைய நிலவரம் என்ன?
அமெரிக்காவின் பணவீக்க தரவானது எதிர்பார்த்ததை போலவே அதிகரித்துள்ள நிலையில், இந்த முறையும் கட்டாயம் வட்டி அதிகரிப்பு இருக்கலாம் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக செப்டம்பர் 20 – 21 அன்று நடக்கவிருக்கும் ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் 75 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என்ற பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. இதற்கிடையில் தங்கம் விலையானது அவுன்ஸுக்கு 1700 டாலர்களுக்கு அருகில் காணப்படுகிறது.
விலை அதிகமாக தோன்றலாம்
அமெரிக்காவின் பணவீக்க தரவானது எதிர்பார்த்ததை போல அதிகரித்து வந்தாலும், தொடர்ந்து மறுபுறம் வட்டி விகிதம் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக டாலரின் மதிப்பானது தொடர்ந்து வலுவான நிலையை எட்டி வருகின்றது. இதன் காரணமாக தங்கம் விலையானது முதலீட்டாளர்களுக்கு காஸ்ட்லியானதாக மாறியுள்ளது.
முக்கிய லெவல்கள்
தங்கத்தின் முக்கிய சப்போர்ட் லெவலாக 1696 – 1682 டாலர்களாக உள்ளது. இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் ஆக 1718 – 1726 டாலர்களாகவும் மேக்தா ஈக்விட்டீஸ் கணித்துள்ளது. இதே இந்திய சந்தையில் 10 கிராமுக்கு முக்கிய சப்போர்ட் லெவலாக 49,940 – 49,810 ரூபாயாகவும், இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் ஆக 57,180- 57,610 ரூபாயாகவும் உள்ளது.
காமெக்ஸ் தங்கம் விலை?
தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் தற்போது அவுன்ஸூக்கு 8.05 டாலர்கள் குறைந்து, 1701.05 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையும், இன்று தொடக்க விலை கீழாகவே உள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் வெள்ளி விலை?
சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் 0.34% குறைந்து, 19.503 டாலராக காணப்படுகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையையும் உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலை மீடியம் டெர்மில் சற்று தடுமாறினாலும், மீண்டும் ஏற்றம் காணும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 274 ரூபாய் குறைந்து, 49,744 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்த விலையையும் உடைத்துள்ளது. மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக வெள்ளி விலையும் சற்று குறைந்தே காணப்படுகின்றது. இது தற்போது கிலோவுக்கு 173 ரூபாய் குறைந்து, 56,814 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்த விலையையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையும் இன்று சற்று குறைந்தே காணப்படுகின்றது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு, 21 ரூபாய் குறைந்து, 4680 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 168 ரூபாய் குறைந்து, 37,440 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 23 ரூபாய் குறைந்து, 5105 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 184 ரூபாய் குறைந்து, 40,840 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 230 ரூபாய் குறைந்து, 51,050 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
இதே ஆபரண வெள்ளி விலை இன்று சற்று குறைந்தே காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 70 பைசா குறைந்து, 61.10 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 611 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 700 ரூபாய் குறைந்து, 61,100 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
முக்கிய நகரங்களில் விலை என்ன?
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)
சென்னையில் இன்று – ரூ.46,800
மும்பை – ரூ.46,200
டெல்லி – ரூ.46,350
பெங்களூர் – ரூ.46,250
கோயம்புத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் – ரூ.46,800
gold price on 15th September 2022: gold prices fall further today
Gold prices are slightly lower in the COMEX market, its may fall further Today