கொச்சி புறப்பட்டவிமானத்தில் தீ| Dinamalar

புதுடில்லி :தென்மேற்கு ஆசிய நாடான ஓமன் தலைநகர் மஸ்கட் நகரில் இருந்து, கேரளாவின் கொச்சி நகருக்கு ‘ஏர் இந்தியா’விமானம் நேற்று புறப்பட தயாராக இருந்தது. இதில், நான்கு குழந்தைகள் உட்பட 145 பயணியர், ஆறு பணியாளர்கள் என, மொத்தம் 151 பேர் இருந்தனர். விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன், இரண்டு இன்ஜின்களுள் ஒன்று தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து, பயணியர் மற்றும் விமான பணியாளர்கள் உடனடியாக கீழே இறக்கப்பட்டனர். பதற்றத்துடன் ஓடி கீழே இறங்கிய போது, பயணியர் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின், பயணியர் அனைவரும் விமான நிலையத்திற்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு, காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அடுத்த சில மணி நேரத்தில் மாற்று விமானம் வாயிலாக, 145 பயணியரும் கொச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.