கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேசத்தை சேர்ந்த சுமார் 26 பேருக்கு கடற்பாசி வளர்ப்பை ஊக்குவிப்பதற்கான இரண்டாம் கட்ட கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு பூநகரி பிரதேச செயலகத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று (14) இடம்பெற்றது.
நீர்வேளாண்மை சார் உற்பத்திகளை விருத்தி செய்வதுடன் கடற்றொழிலாளர்களுக்கு மேலதிக வாழ்வாதாரத்தினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கடற்பாசி செய்கைக்காக தலா ஒரு லட்சம் ரூபாய் ஊக்குவிப்புத் தொகை வழங்கத் திட்டமிடப்பட்டது.
அதனடிப்படையில், பூநகரி பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்னர் முதல் கட்டமாக 50,000 ரூபாய் வழங்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் இரண்டாம் கட்ட ஊக்குவிப்புத் தொகை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.