அமெரிக்க பங்கு சந்தையில் நிலவிய சரிவுக்கு பிறகு இன்று இந்திய சந்தையிலும் ஏற்ற, இறக்கம் அதிகமாக இருந்தது. குறிப்பாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவில் தான் தொடங்கியது.
குறிப்பாக சென்செக்ஸ் 412.96 புள்ளிகள் அதிகரித்து, 59,934.01 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது, இதே நிஃப்டி 126.35 புள்ளிகள் குறைந்து, 17,877.40 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது.
கோடக் மகேந்திரா மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பல பங்குகளை வாங்க நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
இன்று இந்திய பங்கு சந்தைகள் பெரும் ஆட்டம் காணலாம்.. ஏன் தெரியுமா?
பங்கு பரிந்துரை
கோடக் மகேந்திரா வங்கி பங்கினை 1954 ரூபாய் என்ற லெவலில் வாங்கலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இதற்கான இலக்கு விலை 2020 ரூபாயாகவும், இதே ஸ்டாப் லாஸ் ஆக 1925 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளனர்.
இதே ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் பங்கினை 3438 ரூபாய்க்கு வாங்க நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இப்பங்கிற்கான இலக்கு விலை 3350 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளனர். இதன் ஸ்டாப் லாஸ் விலை 3390 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எஸ்பிஐ
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பங்கினை ஐசிஐசிஐ டைரக்ட் தரகு நிறுவனம் இலக்கு விலையாக 650 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இதன் தற்போதைய சந்தை விலை 570.95 ரூபாயாக உள்ளது. இதற்காக நிபுணர்கள் 1 வருடம் அவகாசம் கொடுத்துள்ளனர். இதன் சந்தை மதிப்பானது 5 லட்சம் கோடி ரூபாயினை தாண்டியுள்ளது.
என்டிபிசி
என்டிபிசி நிறுவனத்தின் பங்கினை 172.35 ரூபாய் என்ற லெவலை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளனர். இதன் இலக்கு விலை 181 ரூபாயாகவும், ஸ்டாப் லாஸ் ஆக 165 ரூபாயினையும் நிர்ணயம் செய்துள்ளனர். இது அடுத்த மூன்று அல்லது இரண்டு வாரங்களில் ஏற்றம் காணலாம் என கணித்துள்ளனர்.
சாலட் ஹோட்டல்ஸ்
சாலட் ஹோட்டல்ஸ் பங்கினை 336.61 என்ற லெவலில் வாங்கலாம் எனவும், இதன் இலக்கு விலையானது 360 ரூபாயாகவும், ஸ்டாப் லாஸ் ஆக 325 ரூபாயாகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த பங்கினில் புல்லிஷ் என்கல்பிங் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ள நிலையில், இதன் பங்கு விலை ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மீடியம் டெர்மில் இப்பங்கின் விலையானது ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பந்தன் வங்கி
பந்தன் வங்கி பங்கு விலையானது 306.50 ரூபாயாக வாங்க நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். ஸ்டாப் லாஸ் 290 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் இலக்கு 335 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது 9% ஏற்றம் கண்டு வருகின்றது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
Buy These 7 Stocks: Brokerage Firms Stock Recommendations
Experts have recommended buying several stocks, including Kotak Mahindra and Asian Paints.