நடிகை டாப்சி பொதுவெளியில் செய்தியாளர்களிடம் கோபப்பட்டு கடுமையாக பதிலுக்கு பேசியுள்ளார்.
தனது படத்தைப்பற்றி நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகம் வருகிறதே எனக் கேள்விக்கேட்ட செய்தியாளரிடம் முதலில் படத்தைப்பற்றி நன்றாக தெரிஞ்சுகிட்டு வந்து கேளுங்கள் என்று எகிறியுள்ளார்.
டாப்சியின் இந்த பேட்டியின் காணொளியை வெளியிட்டு நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
பொது இடங்களில் பிரபலங்கள் செயல்பாடு
பொதுவாக பிரபலங்களின் செயல்பாடுகள் பொதுவெளியில் சிறிது பிசகினாலும் கடுமையாக ட்ரோல் செய்யப்படுவார்கள். இதில் பிரபலத்தின் பக்கம் நியாயம் இருந்தாலும் அவரின் செயல்பாடு பொதுவெளியில் சற்று பிசகினாலும் கண்டிப்பாக விமர்சனம் உண்டு. அதனால் தான் பெரும்பாலான சினிமா பிரபலங்கள் மீடியாக்களை சந்திக்க அஞ்சுவார்கள். சந்தித்தாலும் கடுப்பான கேள்விகளை சிரித்து கடந்துவிடுவார்கள். சிலர் செய்தியாளர்களை சந்திப்பதை லாவகமாக கையாளுவார்கள்.
சர்ச்சை நாயகி டாப்சி
தனது பேச்சு எழுத்து மூலம் அடிக்கடி பிரச்சினையில் சிக்குபவர் டாப்சி பன்னு. இவர் வேறு யாரும் அல்ல தனுஷ் தேசிய விருதுப்பெற்ற ஆடுகளம் படத்தின் ஹீரோயின். தான் பேட்டி அளிக்கும்போது பிரச்சினை கிளப்புகிறவர்களுக்கு தகுந்த பதிலடியை அங்கேயே கொடுத்துவிடுவார். ஒருமுறை கோவா படவிழாவில் ஆங்கிலத்தில் பதிலளித்துக் கொண்டிருந்தார். இந்தியில் பேசுங்கள் என ஒருவர் சொல்ல இங்கு இந்தியில் பேசினால் எத்தனை பேருக்கு புரியும் என்று கேட்டதற்கு ஆங்கிலத்தில் பலரும் பேச சொன்னார்கள். தொடர்ந்து அவர் ஆங்கிலத்தில் பேச நீங்கள் பாலிவுட் நடிகை அதனால் இந்தியில் பேச வேண்டும் என அந்த நபர் மீண்டும் சொல்ல நான் தமிழில் அறிமுகமானேன், தமிழில் உங்களிடம் பேசவா என கேட்டு வாயை அடைத்தார்.
ஓடிடி பிளே விருது நிகழ்ச்சியில் டாப்சி
நேற்று நடிகை டாப்ஸி பண்ணு சமீபத்தில் OTT Play விருதுகள் 2022 இல் கலந்து கொண்டார். செய்தியாளர் சந்திப்பில் அவரது டோபரா திரைப்படத்தைப் பற்றி கருத்துத் தெரிவித்தபோது, படம் விமர்சகர்களிடமிருந்து எதிர்மறையான கருத்துக்களைப் பெற்று வருகிறதே என்று செய்தியாளர் கேட்டபோது கோபப்பட்ட அவர் முதலில் படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் செய்யுங்கள் என ஆவேசமாக கூறினார்.
சத்தம் போடாதீர்கள் செய்தியாளர்களிடம் பாய்ந்த டாப்சி
சத்தம் போடாதீர்கள், பிறகு நடிகர்கள் தவறானவர்கள் என்று சொல்வீர்கள் என்று கூறினார். அப்போது ஒரு செய்தியாளர் டாப்சியிடம் “நெகட்டிவ் விமர்சனம்” என்று கேட்க உங்கள் படமான ‘டோபரா’வுக்கு எதிராக அதிகம் விமர்சனம் செய்யப்படுகிறதே என்று கேட்டதற்கு அவர் கோபத்துடன், எந்தப் படம் விமர்சனத்தை எதிர்கொள்ளவில்லை?” என்று கேள்வி எழுப்பினார். பத்திரிகையாளர் மேலும் அவரிடம் கேள்வி கேட்க முயன்றபோது, அவர் குறுக்கிட்டு, என் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லுங்கள், உங்களுடைய கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன். எந்தப் படம் அதை எதிர்கொள்ளவில்லை என்று சொல்லுங்கள்” என்று கோபமாக கேட்டார்.
விமர்சனத்தை தாங்க முடியாவிட்டால் எதற்கு படம் எடுக்கவேண்டும்
“விமர்சனங்களை ஜீரணிக்க முடியாவிட்டால் எதற்காக படம் எடுக்க வேண்டும். ஏன் இப்படி கோபப்படுகிறார் டாப்ஸி என சிலர் கேள்வி எழுப்பினர். விமர்சகர்கள் தாண்டி பட விமர்சனங்களும் எதிராக இருக்கிறது என்கிற கேள்விக்கு அவர் கோபப்பட்டு பதிலளிக்காமல் இருந்தார். புகழ்பெற்ற இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கிய, டோபரா படம் டைம் ட்ராவல் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட அறிவியல் புனைவு கதை திரில்லர் திரைப்படமாகும். இந்தப்படத்தில் டாப்ஸி மற்றும் பாவில் குலாட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏக்தா கபூர் தயாரித்த இந்தப் படம், 2018 ஆம் ஆண்டு வெளியான ஸ்பானிஷ் த்ரில்லர் படமான மிராஜ் படத்தை இந்தியில் தழுவி எடுத்துள்ளனர். இப்படம் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றது.