இடுக்கி, பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பது பழமொழி. ஆனால், கேரள போலீஸ் ஸ்டேஷன் ஒன்றில் பாம்பு தான் துணை என போலீசார் அதை போற்றி வருகின்றனர்.கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்கு தமிழக எல்லையில் உள்ள, கம்பம்மெட்டு போலீஸ் ஸ்டேஷன் வனப்பகுதியில் உள்ளதால், குரங்குகள் அணி அணியாக வந்து ஸ்டேஷனை துவம்சம் செய்து வந்துள்ளன. இதனால், வெறுத்துப்போன போலீசார், என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து உள்ளனர். இந்நிலையில், அருகில் உள்ள எஸ்டேட் உரிமையாளர் ஒருவர் ஒரு யோசனை தெரிவித்தார்.
இதன்படி, ஸ்டேஷனின் கதவுகள், ஜன்னல்கள் மற்றும் அருகில் உள்ள மரங்களில், போலீசார் சீன தயாரிப்பு ரப்பர் பாம்புகளை தொங்கவிட்டு உள்ளனர். நிஜ பாம்புகளைப் போலவே உள்ள இந்த ரப்பர் பாம்புகளை பார்த்து, குரங்குகள் மிரண்டு போய் ஸ்டேஷன் பக்கம் தலைவைத்து படுப்பதில்லை. மக்களுக்கு காவலாக இருக்கும் போலீசாரை, தற்போது ரப்பர் பாம்புகள் காப்பாற்றி வருவது வியப்பை தருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement