மாட்டுப்பட்டிகாடு மலைக்கிராமத்தில் வீட்டை சூறையாடிய ஒற்றை யானை

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட மலைகிராமங்களான வடகாடு, பால்கடை, பெத்தேல்புரம், மாட்டுப்பட்டிகாடு ,வண்டிப்பாதை, புலிக்குத்திக்காடு உள்பட பல்வேறு மலைகிராமங்களில் காட்டு யானைகள், சிறுத்தைப்புலிகள், மான்கள், காட்டு எருமைகள், குரங்குகள், செந்நாய்கள், மலைப்பாம்புகள் என பல உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வடகாடு ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஒற்றை யானை ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி, விளை நிலங்களை சேதப்படுத்தியும் வருகிறது.

நேற்றுமுன்தினம் இரவு மாட்டுப்பட்டி காடு பகுதியில் ஊருக்குள் புகுந்த ஒற்றைையானை விநாயகம் என்பவரது வீட்டை துவம்சம் செய்து, பழம் தரக்கூடிய மரங்களான தென்னை உலக மரம் பலா மரம் உள்ளிட்ட மரங்களை சேதப்படுத்தி மற்றும் உணவுப்பொருட்களை சாப்பிட்டுவிட்டுச் சென்றது. மேலும் கடந்த சில நாட்களாக காட்டு மாடு ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது.

பொதுமக்கள் தங்கள் அன்றாட வேலைகளை செய்வதற்கே மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி கூறுகையில், ‘‘யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும். பொதுமக்கள் தேவையின்றி இரவு நேரங்களில் வெளியில் நடமாட வேண்டாம் என்றும், தங்கள் தேவைகளை பகள் நேரங்களில் பூர்த்தி செய்துகொண்டு, இரவு நேரத்தில் வீட்டிலேயே இருக்கும்படி கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.