உலகின் மூன்றாவது பெரிய பில்லியனராக ஏற்றம் கண்டிருக்கும் கெளதம் அதானி, இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் பில்லியனராவார். தற்போது ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரராகவும் உயர்ந்துள்ளார்.
தொடர்ந்து பற்பல வணிகங்களில் முதலீடுகளை அதிகரித்து வரும் அதானி, பல புதிய புதிய வணிகங்களிலும் முதலீடு செய்து வருகின்றார். இப்படி சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள கெளதம் அதானியின் வசம் உள்ள கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன வாருங்கள் பார்க்கலாம்.
அதானி குரூப் கணக்கீட்டில் தவறு.. உண்மையை ஒப்புக்கொண்ட CreditSights..!

60-வது பிறந்த நாளில் ரூ.60,000 கோடி
பொதுவாக பில்லியனர்கள் என்றாலே அவர்களிடம் காஸ்ட்லியான பல விஷயங்கள் இருப்பது சாதாரண விஷயம் தான். அப்படி அதானியின் வசம் இருக்கும் விலையுயர்ந்த பொருட்கள், சொத்துகள், விலையுயர்ந்த விஷயங்கள் என்ன? அதன் மதிப்பு எவ்வளவு?
அதானி கடந்த ஜூன் மாதத்தில் தனது 60வது பிறந்த நாளை கொண்டாடினார். அந்த நாளில் சமூக பாதுகாப்பு சேவைகளுக்காக, 60,000 கோடி ரூபாய் நன்கொடையை அறிவித்தார். இது இந்திய மக்களின் நிலையை மேம்படுத்த உதவும் என அறிவிக்கப்பட்டது.

மொத்த சொத்து எவ்வளவு?
உலகின் மூன்றாவது பெரிய பில்லியனர் ஆன கெளதம் அதானி, ஆசியாவில் முதல் பணக்காரர் என்பது அறிந்த ஒரு விஷயமே. இவரின் சொத்து மதிப்பு ப்ளூம்பெர்க் அறிக்கையின் படி 147 பில்லியன் டாலராக உச்சம் தொட்டுள்ளது.

3 ஜெட் விமானங்கள்
பில்லியனர்கள் வசம் தனி விமானங்கள் இருப்பது ஆச்சரியம் இல்லை என்றாலும், கெளதம் அதானியிடம் மூன்று ஜெட் விமானங்கள் உள்ளன. அது பீஸ்கிராஃப்ட், ஹாக்கர், பாம்பார்டியா ஆகும். இது தவிர அதிவிரைவாக செல்லக்கூடிய 3 ஹெலிகாப்டர்கள். இதில் 2011ல் AW139 ரக ஹெலிகாப்டரை 12 கோடி ரூபாய்க்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

காஸ்ட்லியான வீடு
ஆரம்ப காலகட்டத்தில் ஒரு வைர வியாபாரியாக தொடங்கிய தனது வணிகத்தினை, இன்று பல்வேறு துறைகளிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். அதில் பலவற்றிலும் வெற்றியும் பெற்றுள்ளார். டெல்லியில் இருக்கும் அதானியின் வீடு ஆதித்யா எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து, கடந்த 2014ல் 3.4 ஏக்கரினை வாங்கியுள்ளார். இன்றைய மதிப்பு 400 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகின்றது.

சாந்திவன் வீடு
குஜராத்தில் அகமதாபாத்தில், கோடீஸ்வரர் கர்னாவதி கிளப்பின் பின்னால் உள்ள பிரதான சாந்திபாத்தில், SG சாலையில் ஒரு பரந்த குடியிருப்பு வைத்திருக்கிறார். இந்த அகமதாபாத் இல்லம் சாந்திவன் வீடு என்று அழைக்கப்படுகிறது. இங்குதான் அகமதாபாத்தில் பிறந்த தொழிலதிபர் தனது குடும்பத்துடன் வாழ்கிறார். தற்போது டெல்லியிலும், அகமதாபாத்திலும் மாறி மாறி இருப்பதாக கூறப்படுகிறது.

கார் கலெக்ஷன் என்ன?
அதானியின் விருப்பப்பட்டியலில் சிவப்பு நிற ஃபெராரி, டொயோட்டா ஆல்பர்ட், BMW 7 ரக கார், ரோல்ஸ் ராய்ஸ் என பல வகையான கார்கள் உண்டு. இது தவிர கெளதம் அதானிக்கு வர்த்தக ரீதியாக மிகப்பெரிய கப்பல் இருப்பதாகவும், அதானியின் இந்த தனியார் கப்பல் தான், இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கப்பல் என்றும் கூறப்படுகிறது.
பிரபல பில்லியனர் ஆன முகேஷ் அம்பானியின் சொத்துகள் மிக பிரபலமாக அறியப்பட்டாலும், அதானியின் சொத்துகள் பெரியளவில் அறிந்திருக்கப்படவில்லை.
Billionaire Gautam Adani’s expensive things?
What are the expensive things that Gautam Adani, one of India’s top billionaires