திருமலை: தெலங்கானாவில் புதிதாக கட்டப்பட்டு வரும் தலைமை செயலகத்துக்கு அம்பேத்கர் பெயர் சூட்ட உள்ளதாக முதல்வர் சந்திரசேகரராவ் தெரிவித்துள்ளார். டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்ற கட்டிடத்துக்கு அம்பேத்கர் பெயரை சூட்ட வேண்டும் என்று சில நாட்களுக்கு முன் தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், தெலங்கானா மாநிலத்திற்கு புதிதாக கட்டப்பட்டு வரும் தலைமை செயலகத்துக்கு அம்பேத்கர் பெயரை சூட்டாமல் ஒன்றிய அரசு கட்டும் நடாளுமன்ற கட்டிடத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்ட வேண்டும் என்று கூறுவதா என்று அம்மா நில பாஜவினர் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்நிலையில், தெலங்கானாவில் புதிதாக கட்டப்பட்டு வரும் தலைமை செயலகத்துக்கு அம்பேத்கர் பெயர் சூட்ட உள்ளதாக சட்டப் பேரவையில் நேற்று முதல்வர் சந்திரசேகரராவ் தெரிவித்துள்ளார்.
