அன்றாட விலையேற்றம் காரணமாக மகளிர் சுகாதாரத் துவாய்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மகளிர் சுகாதார துவாய்களை, பாடசாலை மாணவிகளுக்கு சலுகை விலையில் வழங்குவது தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
மகளிர் சுகாதார துவாய் ஆடம்பரப் பொருள் அல்ல அது பெண்களின் சுகாதாரத்திற்கு மிக அத்தியவசியமானது எனவும் அவர் மேலும் விபரித்தார்.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் என்ற ரீதியல் தான் இது பற்றி கவனத்திற் கொள்வதாகவும்;, மகளிர் சுகாதார துவாய்க்கான வரியை நீக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப் போவதாக தெரிவித்த அவர் , ஜனாதிபதி இதனை நிறைவேற்றுவார் என நம்புவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினால் (news.lk) மகளிர் சுகாதாரத் துவாய்களின் விலை அதிகரிக்கின்றமை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க இந்த விடயங்களை குறிப்பிட்டார்.