இலங்கையின் நிலையான கைத்தொழில் அபிவிருத்திக்காக ஐரோப்பிய ஒன்றியத்தினால் 22.83 அமெரிக்க டொலர் மற்றும் 18.75மில்லியன் யூரோ நிதியை வழங்கியிருப்பதாக ஐக்கிய நாடுகள் கைத்தொழில் அபிவிருத்தி நிறுவனத்தின்; (ருNஐனுழு) இலங்கைப் பிரதிநிதி பேராசிரியர் ரேனோ வேன் பர்கல் (னுச. சுயநெ ஏயn டீநசமநட) தெரிவித்தார்.
இலங்கையின் கைத்தொழில் அபிவிருத்திக்கான தேசிய திட்டத்திற்கு மேலும் ஒத்துழைப்பு வழங்குவதாக கைத்தொழில் அமைச்சில் இடம்பெற்ற செயற்குழுக் கூட்டத்தில் பேராசிரியர் ரேனோ வேன் பர்கல இதனைத் தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்ட நிதி 2015 முதல் 2023 வரையான எட்டு வருட காலத்திற்கு கைத்தொழி;ல் அபிவிருத்திக்காக வழங்கப்பட்டதுடன் அவை கைத்தொழில் துறையின் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளல் , எரிசக்தி முகாமைத்துவம், மீள்புத்தாக்க சக்தி போன்ற பிரிவுகளை அபிவிருத்தி செய்வதற்காக வழங்கப்பட்டுள்ளது.
கைத்தொழில் அமைச்சுடன் இணைந்து ஐக்கிய நாடுகள் கைத்தொழில் அபிவிருத்தி நிறுவனம் (ருNஐனுழு), ஐரோப்பா சங்கம், மின்வலு அமைச்சு, சுற்றாடல் அமைச்சு, இலங்கை வணிக சபை, இலங்கை தொழில் அபிவிருத்திச் சபை ஆகிய அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்த செயற்குழுவிற்கு ஊடாக இக்கைத்தொழில் அபிவிருத்திக்கான ஒருங்கிணைப்பு மற்றும் பரிந்துரைகள் மேற்கொள்ளப்படும் என கைத்தொழில் அமைச்சு தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கைத்தொழில் அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர, ஐக்கிய நாடுகள் கைத்தொழில் அபிவிருத்தி நிறுவன (ருNஐனுழு) இலங்கைப் பிரதிநிதி பேராசிரியர் ரேனோ வேன் பர்கல் (னுச. சுயநெ ஏயn டீநசமநட)இ ருNஐனுழு வின் தேசிய பணிப்பாளர் நவாஸ் ராஜாப்தீன் மற்றும் அரச, தனியார் துறைப் பிரதிநதிகளின் இக்கூட்டத்தில் பங்குபற்றினர்
