புதுடெல்லி,
புதிய பார்மசி கல்லூரிகள் தொடங்குவதை 2020-21-ம் கல்வியாண்டு தொடங்கி 5 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்குமாறு மாநிலங்களுக்கு இந்திய பார்மசி கவுன்சில் கடந்த 2019-ம் ஆண்டு கடிதம் எழுதியது.
இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த டெல்லி, சத்தீஷ்கார், கர்நாடக மாநில ஐகோர்ட்டுகள், புதிய பார்மசி கல்லூரிகளை தொடங்க 5 ஆண்டுகள் விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டன.
இந்த உத்தரவுகளுக்கு எதிராக இந்திய பார்மசி கவுன்சில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்து தீர்ப்பு கூறியது.
அந்த தீர்ப்பில், ‘நிர்வாக ரீதியிலான உத்தரவுகளை கொண்டு புதிய பார்மசி கல்லூரிகளை தொடங்க தடை விதிக்க முடியாது. இந்திய பார்மசி கவுன்சிலின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம்’ என்று தெரிவித்து ஐகோர்ட்டு தீர்ப்பை உறுதி செய்தனர்.