“போட்டோவில் நிர்வாணமாக இருப்பது நான் இல்லை, அது மார்ஃபிங்”: உருட்டுன்னாலும் ஒரு நியாயம் வேண்டாமா?

மும்பை: பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படங்கள் வெளியாகி கடும் சர்ச்சையானது.

பிரபல ஆங்கில இதழுக்காக ரன்வீர் சிங் கொடுத்த நிர்வாண போட்டோ சூட்டுக்கு எதிராக அவர் மீது வழக்கும் தொடரப்பட்டது.

மும்பை செம்பூர் காவல் நிலையத்தில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணையில் ரன்வீர் சிங் விளக்கம் அளித்துள்ளார்.

சர்ச்சைகளின் சாகச நாயகன்

திரை பிரபலங்கள் என்றாலே அவர்களை சுற்றி ஏரளமான சர்ச்சைகள் வலம் வருவது உண்டு. அதிலும் பாலிவுட் ஹீரோக்கள் இதில் தனி ரகம் என்றே சொல்லலாம். முன்னணி நடிகர்கள் முதல் நடிகைகள் வரை தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்குவது அவர்களுக்கு பொழுதுப்போக்கான ஒன்று. இந்நிலையில், பாலிவுட்டின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங், கடந்த சில நாட்கள் முன்னர் நிர்வாண போட்டோ ஷூட் நடத்தி அனைவரையும் அலற விட்டார்.

நிர்வாண போட்டோ ஷூட்டும் சர்ச்சைகளும்

நிர்வாண போட்டோ ஷூட்டும் சர்ச்சைகளும்

பிரபல ஆங்கில நாளிதழுக்காக ரன்வீர் சிங் நடத்திய இந்த நிர்வாண போட்டோ ஷூட், இணையம் முழுவதும் செம்மையாக வைரலானது. மேலும், ரன்வீர் சிங்கின் இந்த நிர்வாண புகைப்படங்களுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இன்னும் சிலர் ரன்வீர் சிங்குக்கு புதிய ஆடைகள் அனுப்பி வைத்து பங்கம் செய்தனர். நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டதற்கு எதிராக அவர் மீது ஏராளமான புகார்களும் குவிந்தன. இன்னொரு பக்கம் ரன்வீர் சீங்குக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்து பல திரைப் பிரபலங்கள் வாண்ட்டடாக வந்து வண்டியில் ஏறினர்.

செம்பூர் காவல் நிலையத்தில் வழக்கு

செம்பூர் காவல் நிலையத்தில் வழக்கு

ஒரேநாள் இரவில் ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் டைம் லைனில் ட்ரெண்ட் ஆனார் ரன்வீர் சிங். மேலும், நிர்வாண படங்களின் மூலம் ரன்வீர் பெண்களின் உணர்வுகளை புண்படுத்தியதாகக் கூறி, ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அதிகாரி செம்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். ஜூலை 26ம் தேதி ரன்வீர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என ரன்வீர் சிங்குக்கு காவல்துறை அறிவுறுத்தியது.

நான் அவன் இல்லை ரேஞ்சில் ரன்வீர் சிங்

நான் அவன் இல்லை ரேஞ்சில் ரன்வீர் சிங்

இந்நிலையில், நிர்வாண புகைப்படம் குறித்து விளக்கம் அளிக்க செம்பூர் காவல் நிலையம் சென்றுள்ளார் ரன்வீர் சிங். அப்போது அவர், “போட்டோவில் நிர்வாணமாக இருப்பது நான் இல்லை, அந்த புகைப்படங்கள் அனைத்துமே மார்ஃபிங் செய்யப்பட்டவை தான். எனக்கும் அந்த புகைப்படங்களுக்கும் சம்பந்தம் இல்லை” என ரன்வீர்சிங் கூறியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். புகைப்படத்தில் நிர்வாணமாக இருப்பது நான் தான் என தெரிந்தும், ரன்வீர் சிங் இப்படி மறுப்பு தெரிவித்துள்ளது பெரிய உருட்டாக இருக்குதே என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.