அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் கல்வி சீர்திருத்த நடவடிக்கைகளுக்காக கல்வி அமைச்சின் கீழ் தனியான நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி முதல் நிர்வாக சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படும், இதன் கீழ் தற்போதுள்ள 96 வலயக் கல்வி அலுவலகங்கள் 120 ஆக அதிகரிக்கப்படும்.
அடுத்த ஆண்டுக்குள் பாடத்திட்ட சீர்திருத்தங்களை ஒழுங்குபடுத்தும் திட்டம் ஒன்றை செயல்படுத்த இந்த நிலையம் திட்டமிட்டுள்ளது. இந்த சீர்திருத்தங்களின் கீழ், ஒரு தொகுதி முறை Module system முறை அறிமுகப்படுத்தப்பட்டு, பாடப்புத்தகங்களுக்கு பதிலாக, மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் ஏற்ற தொகுதிகள் வழங்கப்படும். மூன்று தரங்களுக்கான தொகுதிகள் தேசிய கல்வி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதுவரை இந்த சீர்திருத்த செயல்முறை கல்வி இராஜாங்க அமைச்சால் செயல்படுத்தப்பட்டது. கல்வி இராஜாங்க அமைச்சு நீக்கப்பட்டதால் ‘கல்வி சீர்திருத்த மையம்’ நிறுவப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சின் செயலாளராக இருந்த பேராசிரியர், உபாலி சேதர் சீர்திருத்தங்களுக்கு பொறுப்பாக இருந்தார்.