ஓய்வை அறிவித்த ரோஜர் பெடரர்.. 41 வயதில் இவ்வளவு சொத்துமதிப்பா?

உலகின் முன்னணி டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் அவர்கள் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

பல கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற அவர் திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

இந்நிலையில் 41 வயதில் அவர் தனது டென்னிஸ் விளையாட்டின் மூலம் சுமார் $550 மில்லியன் சொத்துக்களை சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தற்போது பார்ப்போம்.

பிரதான் மந்திரி ரோஜர் யோஜனா தொழிற் கடன் திட்டம் குறித்து இளைஞர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியவை!

ரோஜர் பெடரர் ஓய்வு

ரோஜர் பெடரர் ஓய்வு

உலகின் மிகச்சிறந்த ஆண்கள் டென்னிஸ் வீரர்களில் ஒருவரான ரோஜர் பெடரர், கிராண்ட்ஸ்லாம் மற்றும் ஏடிபி போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பை அவர் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். டென்னிஸ் ஜாம்பவானான ரோஜர், 20 கிராண்ட்ஸ்லாம்களை வென்றுள்ளார். அடுத்த வாரம் லண்டனில் நடைபெறவுள்ள லேவர் கோப்பை தான் தன்னுடைய கடைசி போட்டியாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளது டென்னிஸ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

நன்றி

நன்றி

தனது ஆதரவாளர்களுக்கும், சக போட்டியாளர்களுக்கும் நன்றி தெரிவித்த ரோஜர் பெடரர், 41 வயது என்பது ஓய்வு பெறுவதற்கான சரியான நேரம் என்று தான் நினைப்பதாக அவர் உருக்கமாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

ரோஜர் பெடரர் சொத்துமதிப்பு
 

ரோஜர் பெடரர் சொத்துமதிப்பு

ரோஜர் பெடரர் கடந்த பல ஆண்டுகளாக டென்னிஸ் விளையாடியதன் மூலம் சம்பளம், விளம்பரம் மற்றும் பரிசுப்பொருட்கள் மூலமாக இதுவரை $550 மில்லியன் சம்பாதித்துள்ளதாக தெரிகிறது. டென்னிஸ் விளையாட்டில் விளையாடியதற்காக $130 மில்லியன் பரிசு தொகையை அவர் பெற்றுள்ளார். 2020 ஆம் ஆண்டில், பெடரர் உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர் என்ற நிலைக்கு உயர்ந்தார். இருப்பினும் 2022ல் 7வது இடத்திற்கு தள்ளப்பட்டார். ஃபெடரர் பல பிரபலமான நிறுவனங்களுடன் விளம்பர ஒப்பந்தங்களை பெற்றுள்ளார். Uniqlo உடனான 10 வருட ஒப்பந்தத்தில் அவருக்கு $300 மில்லியன் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்பான்சர்கள்

ஸ்பான்சர்கள்

பிரபல விளையாட்டு வீரர்கள் என்றால் அவர்களுக்கு ஸ்பான்சர்கள் குவியும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் Moët Hennessy Louis Vuitton, Mercedes-Benz, NetJets, On, RIMOWA, Rolex, Sunrise Communications AG, Switzerland Tourism போன்ற பிரபலமான நிறுவனங்கள் அவருக்கு ஸ்பான்சர்களாக இருந்தன.

ரசிகர்களுக்கு உருக்கமான செய்தி

ரசிகர்களுக்கு உருக்கமான செய்தி

ரோஜர் பெடரர் தனது ஓய்வு குறித்து ரசிகர்களுக்கு கூறிய செய்தியில், ‘எனக்கு 41 வயதாகிறது. நான் 24 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ளேன். நான் கனவு கண்டதை விட டென்னிஸ் என்னை உச்சத்தில் வைத்துள்ளது. இப்போது நான் ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டதால் எனது டென்னிஸ் வாழ்க்கையை முடித்து கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

மனைவிக்கு நன்றி

மனைவிக்கு நன்றி

ஒவ்வொரு நிமிடமும் தனக்கு பக்கபலமாக நிற்கும் மனைவி மிர்காவுக்கு பெடரர் நன்றி தெரிவித்தார். ஒவ்வொரு போட்டிக்கு முன் என் மனைவி என்னை உற்சாகப்படுத்தினார், 8 மாத கர்ப்பிணியாக இருந்தபோதும் நான் விளையாடிய பல போட்டிகளை அவர் பார்த்தார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக என்னை அவர் நன்றாக கவனித்து கொண்டார். அவருக்கு எனது நன்றி’ என ரோஜர் பெடரர் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Roger Federer announces retirement: What is his noteworthy?

Roger Federer announces retirement: What is his noteworthy? | ஓய்வை அறிவித்த ரோஜர் பெடரர்.. 41 வயதில் இவ்வளவு சொத்துமதிப்பா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.