850 ஊழியர்கள் வேலைநீக்கம்.. மற்றொரு மிகப்பெரிய நடவடிக்கையால் ஊழியர்கள் அதிர்ச்சி

ஒவ்வொரு நாளும் வேலை வாய்ப்பு செய்திகள் வருகின்றதோ இல்லையோ வேலைநீக்கம் செய்திகள் வெளிவந்து மக்களை பயமுறுத்தி வருகிறது.

கூகுள், மைக்ரோசாப்ட் உள்பட பல முன்னணி நிறுவனங்கள் ஊழியர்கள் குறைப்பு நடவடிக்கையை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் கிளவுட் கம்யூனிகேஷன் என்ற முன்னணி நிறுவனம் தனது நிறுவனத்தில் வேலை செய்துவரும் 850 ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வேலைநீக்கம் செய்யும் மற்றொரு அமெரிக்க நிறுவனம்.. கண்ணீரில் ஊழியர்கள்

கிளவுட் கம்யூனிகேஷன்ஸ்

கிளவுட் கம்யூனிகேஷன்ஸ்

கிளவுட் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமான ட்விலியோ அதன் 11 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. உலகளவில் அதன் 7,800 பணியாளர்களில் இருந்து 850 க்கும் அதிகமானோர் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஊழியர்கள் பாதிப்பு

ஊழியர்கள் பாதிப்பு

கிளவுட் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் உள்ள வேலைநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு இதுகுறித்த தகவல் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் என்று கிளவுட் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஊழியர்களுக்கு பெரும் பாதிப்பாக கருதப்படுகிறது.

வேலைநீக்கம்

வேலைநீக்கம்

வேலைநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் கிளவுட் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவரை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்று ட்விலியோ தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் லாசன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பொறுப்பு ஏற்பதாக அறிவிப்பு
 

பொறுப்பு ஏற்பதாக அறிவிப்பு

நான் சில விஷயங்களை சொல்ல முடியாத நிலையில் இருக்கின்றேன் என்று கூறிய லாசன், பணிநீக்கம் என்பது நமது நிறுவனம் எடுக்கும் கடைசி கட்ட நடவடிக்கை என்றும், ஆனால் அது புத்திசாலித்தனமானது மற்றும் அவசியமானது என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்த முடிவுக்கு நான் பொறுப்பேற்கிறேன் என்றும், இந்த பணிநீக்கம் செய்வதற்கான கடினமான முடிவை நான் தான் எடுத்தேன் என்பதை ஒப்பு கொள்கிறேன் என்றும் லாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முதலீடு

முதலீடு

மேலும் நாங்கள் செய்த முதலீடுகளின் அளவு மற்றும் அந்த முதலீடு எங்கள் நிறுவனத்திற்கு எந்த அளவுக்கு பலன் கொடுத்தது என்பதைப் பார்த்தோம் என்றும், சில முதலீடுகள் இனி அர்த்தமற்றவை என்பதை நாங்கள் இறுதியில் கண்டறிந்தோம் என்றும், மேலும் நாங்கள் மிகவும் திறமையாக இருக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்ததால் இந்த வேலைநீக்க நடவடிக்கையை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

850 employees Layoffs! Cloud Communication Firm Twilio Sacks 11% Of Total Workforce

850 employees Layoffs! Cloud Communication Firm Twilio Sacks 11% Of Total Workforce | 850 ஊழியர்கள் வேலைநீக்கம்.. மற்றொரு மிகப்பெரிய நடவடிக்கையால் ஊழியர்கள் அதிர்ச்சி

Story first published: Friday, September 16, 2022, 8:12 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.