புதுடெல்லி:
CUET தேர்வு முடிவுகள் வெளியானது.
இந்த கல்வியாண்டு முதல், CUET என்ற தேசிய நுழைவுத்தேர்வு மூலம் நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
அதன் படி, ஜுலை 15 முதல் ஆகஸ்ட் 30ம் தேதி வரை ஆறு கட்டங்களாக தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் 44 மத்தியப் பல்கலைக்கழகங்கள், 12 மாநில பல்கலைக்கழகங்கள், 11 தன்னாட்சிப் பல்கலைக்கழகங்கள், 19 தனியார் பல்கலைக்கழகங்கள் என மொத்தம் 90 பல்கலைக் கழகங்களில் உள்ள 54,555 பாட பிரிவுகளில் சேரக்கை இந்து நுழைவு தேர்வு மூலமே மேற்கொள்ளப்படுகிறது.
இந்த தேர்வை 9,68,201 பேர் எழுதினர். இந்நிலையில் CUET தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. தேர்வு எழுதியவர்கள் https://cuet.samarth.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முடிவுகளை தெரிந்துக்கொள்ளலாம்.
தேர்வு எழுதியவர்களின் விவரங்கள் தொடர்புடைய பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் தாங்கள் சேர விரும்பிய பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டு சேர்க்கை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.