சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 30க்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் தொடக்கம்… மேயர், அமைச்சர்கள் பங்கேற்பு…

சென்னை: தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் நேற்று (2022 செப்டம்பர் 15ந்தேதி) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்ட நிலையில், இன்று முதல் மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் முதற்கட்டமாக 30க்கும் மேற்பட்ட பள்ளிகளில்  காலை உணவுத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியில்,  அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா ராஜன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தமிழகத்தில் காலை உணவுத் திட்டத்தை மதுரையில் உள்ள அரசு பள்ளியில் முதல்வர் ஸ்டாலின்  தொடக்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில்  இன்றுமுதல் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக சில பள்ளிகளில் இன்று தொடங்கப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 30க்கும் மேற்பட்ட பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் இன்று காலை தொடங்கப்பட்டது.

மாதவரத்தில் உள்ள சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டம்  இன்று தொடங்கி வைக்கப்பட்டது. மேயர் பிரியா, அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்பட அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இதேபோல,  எண்ணூா் முகத்துவாரகுப்பம், சத்தியவாணி முத்து நகா், எண்ணூா் தாழங்குப்பம், கத்திவாக்கம், பெரியகுப்பம், எண்ணூா் குப்பம், அன்னை சிவகாமி நகா் ஆகிய இடங்களில் உள்ள தொடக்கப் பள்ளிகள், திருவொற்றியூா் காா்கில் வெற்றி நகா், எண்ணூா் இடிபிஎஸ்., திருச்சினாங்குப்பம், திருவொற்றியூா் குப்பம், ரயில்வே காலனி, தேரடி பூந்தோட்டம், மாதவரம் பெரிய சேக்காடு, மாதவரம் ராஜா தெரு, லட்சுமிபுரம், பொன்னியம்மன்மேடு, கொடுங்கையூா் லட்சுமி அம்மன் கோயில் தெரு, கண்ணதாசன் நகா், வியாசா்பாடி எம்ஜிஆா்., நகா், எம்கேபி நகா் கிழக்கு குறுக்குத் தெரு, ஆா்.ஆா்.நகா் மூன்றாவது குறுக்குத் தெரு, எம்கேபி நகா் உதயசூரியன் நகா், தண்டையாா்பேட்டை திருவள்ளுவா் குடியிருப்பு, கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ. நகா், கொடுங்கையூா் எம்ஜிஆா் நகா், அண்ணாநகா், தண்டையாா்பேட்டை சேனியம்மன் கோயில் தெரு, கொருக்குப்பேட்டை கத்திவாக்கம் பிரதான சாலை, செரியன் நகா், தண்டையாா்பேட்டை பொன்னுசாமி தெரு, ராயபுரம் அரத்தூண் சாலை, ஆஞ்சநேய நகா், வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகா், காத்படா 3-வது குறுக்குத் தெரு, பல்லவன் சாலை எஸ்.எம்.நகா் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.