மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தேனி மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான கே.பாலபாரதி சிறப்புரையாற்றினார்.
காற்றாலை மின் உற்பத்தியை முறைப்படுத்தி மின்வாரியத்தைப் பாதுகாக்க வேண்டும் எனக் கூறி அரிக்கேன் விளக்குடன் முழக்கமிட்டனர்.
மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் டி.வெங்கடேசன், கே.ஆர்.லெனின், இ.தர்மர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.ராமச்சந்திரன், சு.வெண்மணி, டி.கண்ணன், மூத்த தலைவர்கள் கே.ராஜப்பன், எல்.ஆர்.சங்கரசுப்பு, எஸ்.கே.பாண்டியன், இடைக்கமிட்டி செயலாளர்கள் எஸ்.செல்வம், மீனாட்சிசுந்தரம், டி.ராஜா, எஸ்.சஞ்சீவிகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.