சுதந்திர போரட்ட தியாகி ராமசாமி படையாட்சியரின் 105வது பிறந்தநாள்! தமிழக அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் மரியாதை…

சென்னை: சுதந்திர போரட்ட தியாகி ராமசாமி படையாட்சியரின் 105வது பிறந்தநாளையொட்டி, அவரது உருவ படத்துக்கு தமிழக அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அரசியல் கட்சியினர்  மரியாதை செய்தனர்.

சுதந்திர போரட்ட தியாகி ராமசாமி படையாட்சியரின் பிறந்தநாளையொட்டி அமைச்சர் மா. சுப்பிரமணியன் மரியாதையை செலுத்தினார். அதுபோல, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும், ராமசாமி படையாட்சியரின் திருவுருவ படத்துக்கு மரியாதை செலுத்தினார். மேலும் பாமக உள்பட அரசியல் கட்சியினர், ராமசாமி படையாச்சிக்கு மரியாதை செய்து வருகின்றனர்.

எஸ். எஸ். ராமசாமி படையாச்சி

எஸ்எஸ் ராமசாமி படையாச்சி என்பவரின் முழுப்பெயர் சிவ சிதம்பர ராமசாமி படையாச்சியார். 1918 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி பிறந்த இவர் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். இன்றைய விழுப்புரம் மாவட்டத்தின் முந்தைய பெயரே எஸ். எஸ். ராமசாமி படையாச்சி மாவட்டம் என்று தான் இருந்தது/ பின்னர்தான் அது மாற்றப்பட்டது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் ராமசாமி படையாட்சி வெற்றி பெற்று சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1954ல் காமராஜர் முதல்வரான பின்னர் ராமசாமி அவரது அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சரானார். மற்றும் 1984 பொதுத்தேர்தல்களில் காங்கிரசு சார்பாக திண்டிவனம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு இந்திய நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1992 ஆம் ஆண்டு மரணமடைந்தார். இன்று எஸ். எஸ். இராமசாமி படையாட்சியார் அவர்களின் 105 ஆவது பிறந்த நாள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.