காலை சிற்றுண்டி திட்டம்: சேலத்தில் தொடங்கிவைத்தார் அமைச்சர் பொன்முடி!

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளில் படிக்கும் ஏழை குழந்தைகளின் படிப்பை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் காலை உணவுத்திட்டத்தை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (செப். 15) மதுரையில் தொடங்கிவைத்தார். இதன்படி, 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, அனைத்துப்பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படுகிறது.

முதற்கட்டமாக இத்திட்டம், சில மாநகராட்சி, நகராட்சி, தொலைதூர கிராமங்களில் தொடங்கப்படுகிறது. படிப்படியாக அனைத்து பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட உள்ளது. சேலம் மாவட்டத்தில் முதற்கட்டமாக, மாநகராட்சி பகுதியில் உள்ள 54 அரசு பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் 5 ஆயிரத்து 719 மாணவ, மாணவிகள் பயன்பெற உள்ளனர்.

— Dr.K.Ponmudy (@KPonmudiMLA) September 16, 2022

இந்த திட்டத்தை திறம்பட செயல்படுத்த சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், பள்ளிக்கல்வி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள், உணவுபாதுகாப்பு ஆகிய துறை அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.