ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிரான சட்டம் ரத்து, தொடரும் தற்கொலை; என்ன செய்யப் போகிறது உச்ச நீதிமன்றம்?

காலங்காலமாகவே சூதாட்டங்கள் ஒரு போதையைப் போல பலரை ஆட்டுவித்து பல குடும்பங்களை சீரழித்துள்ளது. இந்நிலையில் டிஜிட்டல் வளர்ச்சியின் காரணமாக சூதாட்டம் ஆன்லைன் தளத்துக்கு மாறியுள்ளது. சமீப காலங்களில் ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபட்ட பலரும் லட்சக்கணக்கான பணத்தை இழந்துள்ள சம்பங்கள் நடந்துள்ளன.

அதுமட்டுமல்லாமல் பலர் பணத்தை இழந்ததற்காக தற்கொலையும் செய்துகொண்டுள்ளனர். இதனால் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் குரல் எழுப்பின.

ஆன்லைன் சூதாட்டம்

இதையடுத்து தமிழக அரசு கடந்த 2020 நவம்பரில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தது. ஆனால் இந்தச் சட்டத்தை எதிர்த்து ஜங்லி ரம்மி, பிளேகேம்ஸ் உள்ளிட்ட ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2021 ஆகஸ்ட் மாதத்தில் தமிழக அரசு இயற்றிய சட்டத்தை போதுமான காரணங்கள் விளக்கப்படவில்லை எனக் கூறி ரத்து செய்தது. அதேசமயம் உரிய சட்ட விதிகளுடன் புதிதாக சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என்பதையும் கூறியது.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கைத் தொடர்ந்தது. அந்த மேல்முறையீட்டு மனுவில் தமிழக அரசு இயற்றிய ஆனலைன் சூதாட்ட தடை சட்டத்தைச் சரியாக பரிசீலிக்காமலேயே சென்னை உயர்நிதிமன்றம் ரத்து செய்துள்ளது.

ஆன்லைன் சூதாட்டம்

தமிழக அரசுக்கு இதுபோன்ற சட்டங்களை இயற்றும் அதிகாரம் உண்டு. எனவே சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இதுதொடர்பாக 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டுமென ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ஆன்லைன் சூதாட்டங்கள் தேவையா என்பதை முதலில் பார்க்க வேண்டும். அதனால் மக்களுக்குப் பாதிப்புதானே தவிர பலன் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

உச்ச நீதிமன்றம்

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கப் போகிறது என்பதைப் பொருத்து தமிழக அரசு முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.