உலகின் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற விருப்பம்! ஷாங்காய் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

சமர்கண்ட்: உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட்டில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.

இதில் பேசிய அவர், “கொரோனா தொற்று மற்றும் ரஷ்ய-உக்ரைன் போர் உலக விநியோக சங்கிலியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்ற விரும்புகிறோம்” என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் இந்த ஆண்டு ஏற்றுமதி அதிகரித்துள்ள நிலையில், பிரதமரின் இந்த உரை நாட்டின் பொருளாதாரத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டமைப்பு

ஜனநாயக மற்றும் சமமான சர்வதேச அரசியல் ஒழுங்கை வளர்ப்பதை நோக்கமாக கொண்டு அதை நோக்கி நகர கடந்த 2001ல் உருவாக்கப்பட்டதுதான் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பாகும். இந்த அமைப்பில் சீனா, இந்தியா, உஸ்பெகிஸ்தான், ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகியவை உறுப்பு நாடுகளாக உள்ளன. இதில் பார்வையாளராக ஈரான், ஆப்கானிஸ்தான், பெலாரஸ் மற்றும் மங்கோலியா போன்ற நாடுகள் உள்ளன. இந்த அமைப்பின் 22வது உச்சி மாநாடு தற்போது உஸ்பெகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.

உற்பத்தி மையம்

உற்பத்தி மையம்

இதில் பங்கேற்பதற்காக கடந்த விழாக்கிழமை தனி விமானம் மூலம் அந்நாட்டிற்கு சென்று சேர்ந்தார் பிரதமர் நரேந்திர மோடி. இதன் தொடர்ச்சியாக இன்று அவர் மாநாட்டில் பேசுகையில் இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்ற விரும்புவதாக கூறியுள்ளார். இதில் அவர் மேலும் பேசியதாவது, “உலகம் கொரோனா தொற்றை முறியடித்து வருகிறது. கொரோனா தொற்று மற்றும் உக்ரைன் நெருக்கடி காரணமாக உலகம் முழுவதும் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்தியாவை நாங்கள் உற்பத்தி மையமாக மாற்ற விரும்புகிறோம்.” என்று கூறினார்.

பொருளாதாரம்

பொருளாதாரம்

தொடர்ந்து பேசிய அவர், “இந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதாரம் 7.5% வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகில் வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்று என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். மக்களை மையமாக கொண்ட வளர்ச்சியில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். இன்று நாடு முழுவதும் 70,000 ஸ்டார்ட்அப் நிறுவனங்களும், 100 யூனிகார்ன் ($1 பில்லியனுக்கு அதிகமான முதலீட்டில் உருவாகும் தனியார் startup நிறுவனங்கள்) நிறுவனங்களும் உள்ளன.

பாரம்பரிய மருத்துவம்

பாரம்பரிய மருத்துவம்

கடந்த ஏப்ரல் மாதம் குஜராத்தில் பாரம்பரிய மருந்துகளுக்கான உலக சுகாதார அமைப்பின் சர்வதேச மையம் ஒன்று அமைக்கப்பட்டது. இவ்வாறு பாரம்பரிய மருத்துவத்திற்காக சர்வதேச மையம் உலக சுகாதார அமைப்பால் அமைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். எனவே பாரம்பரிய மருந்துகளுக்காக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளுடன் சேர்ந்து பணியாற்ற முயற்சிகளை இந்தியா எடுக்கும்.” என்றும் கூறியுள்ளார். உக்ரைன்-ரஷ்யா போர் தொடங்கிய பின்னர் ரஷ்ய அதிபர் புதினை பிரதமர் மோடி முதன் முறையாக இந்த மாநாட்டில் சந்தித்து பேச இருக்கிறார்.

தைவான் கடற்பகுதியில் சீனா போர் பயிற்சி மேற்கொண்டது, ரஷ்ய-உக்ரைன் போர் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு மத்தியில் இந்த எட்டு நாடுகளும் சந்தித்து பேசும் முக்கிய நிகழ்வாக இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு பார்க்கப்படுகிறது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.