சில நாட்களுக்கு முன்பு உத்தரப் பிரதேசத்தில் லக்கிம்பூர் கேரியில் இரண்டு இளம் சகோதரிகள் பாலியல் வன்முறை கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர், வியாழக்கிழமை என்கவுண்டருக்குப் பிறகு அவரது காலில் சுட்டுக் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த பெண்களின் உடல்கள் மரத்தில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து மொத்தம் 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள், சிறுமிகள் தொடர்ந்து வல்லுறவுக்கு ஆளாகி வருவது தொடர்கதையாகி வருகிறது.
உத்தரப் பிரதேசத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்கள் தான் பாலியல் வன்கொடுமைகள் அதிகம் பதிவாகியுள்ளது. ஒரு பக்கம் உ.பியில் அதிக வளர்ச்சியைப் பாருங்கள் என்று பற்றி முதல்வர் யோகி யோகி ஆதித்யநாத் பேசி வருகிறார். ஆனால் அங்கு தொடர்ந்து தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்படுவது வாடிக்கையாகிவிட்டது.
கடந்த வருடம் 2021ல் ,15.3% இதுபோன்ற அதிகரித்துள்ளது என்றும் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) அறிக்கை தெரிவிக்கிறது. 2022ல் இந்த சதவீதமானது மேலும் அதிகரிக்கும் என சமூக ஆர்வலர்கள் தெவிக்கிறார்கள்.
2018ல் 3,78,236 வழக்குகளும், 2019ல் 4 லட்சமாகவும் அதிகரித்திருந்தது. அந்தவகையில், 2021 ஆம் ஆண்டில் நாட்டிலேயே அதிகபட்ச குற்றங்களை உத்தரப்பிரதேசத்தில் பெண்கள் எதிர்கொண்டுள்ளனர் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. நாகாலாந்து , மிசோரம், கோவா பெண்களுக்கு எதிரான குற்றங்களை மிகக் குறைவாக நடைபெறுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில் கற்பழிப்பு அல்லது கற்பழிப்பு முயற்சி எதுவும் நடக்காத ஒரே யூனியன் பிரதேசம் அல்லது மாநிலம் லட்சத்தீவு மட்டுமே. அடுத்ததாக 19 பெருநகரங்களில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக எண்ணிக்கை டெல்லியில் தான் பதிவாகியுள்ளது உள்ளது. 2021 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் மொத்தம் 31,677 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாடெங்கும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள், சிறுமிகள் தொடர்ந்து வல்லுறவுக்கு ஆளாகி வருவது தொடர்கதையாகி வருகிறது
இந்த அறிக்கையில் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டிய்வது, 2020ல் தண்டனை விகிதம் 29.8 சதவீதமாக இருந்தது ஆனால் 2021ல் 25.2 சதவீதமாகக் குறைந்துள்ளது என்பது தான். குற்றங்கள் அதிகரிக்கும் போது தண்டனைகள் குறைவாகவே பதிவாகியிருக்கும் முரண், இந்தியாவில் பெண்களுக்குக்கான பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறியாகி வருவதை அரசாங்கம் கவனிக்கத் தவறுவது பெரிய அவலம். தமிழகத்திலும், 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்திய வழக்கில் 21 பேர் குற்றவாளிகள் எனச் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இதுபோன்று பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு சட்டப்படியான நடவடிக்கைகளையும் , தண்டனைகளைப் பற்றி ஒரு பக்கம் பேசும் போது, மறுபக்கம் பெண்களுக்கு எதிரான கருத்தியல் ரீதியான மனமாற்றமும், சாதிய ரீதியிலான மனோபவத்தையும், ஆணாதிக்க சிந்தனையையும் ஒழிப்பது குறித்துத் தொடர்ந்து பேச வேண்டியதும் அவசியம். வெறும் சட்டங்களால் மட்டும் குற்றங்களைத் தடுக்க முடியாது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM