குஜராத் : சர்வதேச ஆங்கில மொழி சோதனை தேர்வில் மோசடி செய்து அமெரிக்காவில் குடியேற முயன்ற வழக்கில் ஒருவருக்கு லுக்அவுட் நோட்டீஸ் வழங்கியிருக்கும் குஜராத் போலீசார் சிறப்பு புலனாய்வு குழுவையும் அமைத்திருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு மேற்படிப்பிற்காகவோ அல்லது வேலைக்காகவோ செல்வோருக்கு குறைந்தப்பட்ச ஆங்கில அறிவு இருப்பது அவசியம். அதற்காக சர்வதேச ஆங்கிலமொழி சோதனை அமைப்பு 140க்கு மேற்பட்ட நாடுகளில் 1600க்கு மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு நடத்தி உரிய சான்றிதழ்களை வழங்கி வருகிறது.
அந்த தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து சான்றிதழ் பெற்ற சில குஜராத் இளைஞர்கள் கனடா வழியாக அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற போது பிடிபட்டனர். அவர்களுக்கு அடிப்படை ஆங்கில அறிவு கூட இல்லாததால் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. இந்த தேர்வு மோசடியில் பெரிய கும்பலே இந்தியாவில் இயங்கி வருவது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் குஜராத் போலீஸ் சிறப்பு புனலாய்வு குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே 3 பேர் கைதான நிலையில் முக்கிய நபரான அமித்சௌத்ரி என்பவருக்கு லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.