சுவீடனில் ஆட்சியை இழந்தது ஆளும் கட்சி

ஸ்டாக்ஹோம்: சுவீடனில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெற்று கூட்டணிக் கட்சிகளுடன் ஆட்சியை அமைக்கிறது.

சுவீடனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. இதில் ஆளும் சமூக ஜனநாயக கட்சிக்கும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு பெரும்பான்மைக்கு 175 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், 173 இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு தற்போது ஆட்சியைப் பிடித்துள்ளது.

வெறும் 3 இடங்கள் வித்தியாசத்தில் ஆளும் கட்சியான சமூக ஜனநாயகக் கட்சி தோல்வி அடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வலது சார்பை உடைய ஜனநாயகக் கட்சி தலைமையிலான கூட்டணி கட்சிகள் சுவீடனில் ஆட்சியை பிடிக்கின்றன.

தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள சுவீடன் பிரதமர் மகதலேனா ஆண்டர்சன் “நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் ஒன்று, இரண்டு இடங்களில் முன்னிலை வகித்துவிட்டார்கள். இது மெல்லிய அளவிலான வித்தியாசம் என்றாலும், இது பெரும்பான்மைதான்” என்று தெரிவித்துள்ளார்.

தேர்தல் தோல்வியை தொடர்ந்து, மகதலேனா ஆண்டர்சன் தனது ராஜினாமாவை அறிவித்திருத்திருக்கிறார். எனினும், புதிய கட்சி ஆட்சி அமைக்கும் வரை மகதலேனா ஆண்டர்சன் சுவீடனின் பிரதமராக தொடர்வார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மகதலேனா ஆண்டர்சன் சுவீடன் பிரதமர் பதவியில் இருந்து வருகிறார். சுவீடனின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமை பெற்றிருந்தார் மகதலேனா ஆண்டர்சன். இவரது தலைமையில் கடந்த சில ஆண்டுகளாக முற்போக்கு நாடாகவே சுவீடன் உருமாறியது என்று அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

முன்னதாக, பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யாபடையெடுத்ததைத் தொடர்ந்து நேட்டோவில் சுவீடனை சேர்க்கும் வரலாற்று முயற்சியில் மகதலேனா ஆண்டர்சன் தீவிரமாக ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.