கைத்தொழில் பிணக்குகள் (திருத்தச்) சட்டமூலங்கள் இரண்டு (130, 132) மற்றும் வேலையாட்களின் தொழிலை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் ஆகிய மூன்று சட்டமூலங்களிலும் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
இதற்கமைய, 2022ஆம் ஆண்டு 22ஆம் இலக்க கைத்தொழில் பிணக்குகள் (திருத்தச்) சட்டம் என்ற பெயரிலும், 2022ஆம் ஆண்டு 23ஆம் இலக்க வேலையாட்களின் தொழிலை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) திருத்தச் சட்டம் என்ற பெயரிலும், 2022ஆம் ஆண்டு 24ஆம் இலக்க கைத்தொழில் பிணக்குகள் (திருத்தச்) சட்டம் என்ற பெயரிலும் இந்த மூன்று சட்டங்களும் இன்றிலிருந்து நடைமுறைக்கு வரும்.
இந்தச் சட்டமூலங்கள் மூன்றும் கடந்த 08ஆம் திகதி விவாதம் இன்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தன.