சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவை பொருளாதார மந்தநிலை குறித்து எச்சரிக்கை மற்றும் கடந்த 10 ஆண்டுகளில் பார்த்திடாத வகையில் உலகம் முழுவதும் நாணய கொள்கை கட்டுப்பாடுகளைக் கட்டுப்படுத்துதல் ஆகியவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் இந்தியா சந்தை மட்டும் அல்லாமல் சர்வதேச அளவில் முதலீட்டாளர்கள் விட்டால் போதும் என மனப்பான்மை உடன் அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்துவிட்டு வெளியேறினர்.
இதன் எரொலியாக இன்றைய வர்த்தகம் ரத்தகளறியாக மாறியது என்றால் மிகையில்லை.
அமெரிக்க பணவீக்கத்தால் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு, ரூ.3 லட்சம் கோடி இழப்பு..!
மும்பை பங்குச்சந்தை
வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று பங்குச்சந்தை சரிவுடன் முடிந்த தொடர்ந்து 3 நாட்களாகச் சரிவை பதிவு செய்துள்ளது. வியாழன் அன்று 60,000 புள்ளிகளுக்குக் கீழே சரிந்த பிறகு, மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 59000 புள்ளிகள் அளவீட்டையும் இழந்துள்ளது.
சென்செக்ஸ், நிஃப்டி
சென்செக்ஸ் குறியீடு இன்றைய வர்த்தக முடிவில் 1,093.22 புள்ளிகள் சரிந்து 58,840.79 புள்ளிகளை எட்டியுள்ளது. இதேபோல் இன்றைய வர்த்தகத்தில் அதிகப்படியாகச் சென்செக்ஸ் 58,687 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது.
நிஃப்டி குறியீடு
இதேபேோல் குறியீடு 2 சதவீதத்திற்கும் மேலாகச் சரிந்தது, முந்தைய அமர்வில் 18,000 புள்ளிகளுக்குக் கீழே சரிந்ததுள்ளது. இதன் மூலம் 346.55 புள்ளிகள் சரிந்து 17,530.85 புள்ளிகளை எட்டியுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் ஐடி, மீடியா, ரியல் எஸ்டேட், ஆட்டோமொபைல் துறை அதிகளவில் சரிந்துள்ளது.
MSCI world equity குறியீடு
47 நாடுகளின் பங்குச்சந்தை வர்த்தகத்தைக் கண்காணிக்கும் MSCI world equity index இன்று 0.5 சதவீதம் வரையில் சரிந்து தொடர்ந்து 4வது நாள் தனது சரிவை பதிவு செய்துள்ளது. ஜூன் மாதத்திற்குப் பின்பு மிகவும் மோசமான சரிவை பதிவு செய்துள்ளது MSCI world equity குறியீடு.
டாலர் மதிப்பு
டாலர் மதிப்பு உயர்ந்து வரும் வேளையில் அமெரிக்காவின் மத்திய வங்கி அடுத்த சில நாட்களில் 0.75 சதவீதம் வரையில் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை உயர்த்த உள்ளது. இந்த வேளையில் இன்று உலக வங்கியின் ரெசிஷன் குறித்த எச்சரிக்கை பங்குச்சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
8 நாள் மொத்தமும் மாறியது..
கடந்த 8 நாட்களில் ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் பிரிட்டன் மத்திய வங்கி வட்டியை உயர்த்தியது, அமெரிக்காவின் ஆகஸ்ட் மாத பணவீக்கம் கணிப்பைக் காட்டிலும் அதிகரித்தது மட்டும் அல்லாமல் எரிபொருள் மீதான பணவீக்கம் குறைந்தும் ரீடைல் பணவீக்கம் அதிகரித்து அமெரிக்காவின் பொருளாதாரக் கட்டமைப்பைக் கிழித்து என மொத்த பங்கு முதலீட்டுச் சந்தையும் தலைகீழாக மாறியுள்ளது.
Sensex, Nifty on friday Bloodbath; World bank, IMF warned recession
Sensex, Nifty on friday Bloodbath; World bank, IMF warned about recession in world countries after USA august inflation data, UK price hike, Europe struggle with russia oil and gas supply