பிரபல நடிகருக்கு வில்லன்..மறுத்து விஸ்வரூபம் எடுத்த விஜயகாந்த்..திருப்புமுனை ஏற்படுத்திய சாட்சி படம்

சென்னை: திரைப்படத்தில் தோல்விகள் காரணமாக அடுத்த படம் வெளிவர முடியாத நிலையில் இருந்தார் விஜயகாந்த்.

அந்த நேரத்தில் பிரபல நடிகருக்கு வில்லனாக நடிக்க வந்த வாய்ப்பை மறுத்தார். பின்னர் அவர் விஸ்வரூபம் எடுக்க காரணமாக அமைந்தது ஒரு படம்.

எஸ்.ஏ.சி விஜயகாந்தின் வாழ்க்கையையே திருப்பிப்போட்ட சாட்சி என்கிற படத்தை எடுத்தார் அதன் பின்னர் ஆரம்பித்த விஜயகாந்தின் இரண்டாவது இன்னிங்கஸ் நாட் அவுட் தான்.

ரஜினி, கமல் சகாப்தத்தின் ஊடே ஊடுருவிய இளைஞன்

தமிழ் திரையுலகில் 80 களின் இறுதியில் எம்ஜிஆர் முதல்வராக பதவி ஏற்றப்பின் ஒதுங்கினார். சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்ஷங்கர், முத்துராமன் போன்ற நடிகர்கள் மத்தியில் இளம் தலைமுறை நடிகர்களின் தேவை ஏற்பட்டது. அப்போது சிறிய வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த கமல்ஹாசன் ஹீரோவானார், ரஜினிகாந்தும் அறிமுகமாகி மக்களை கவர்ந்தார். அடுத்த தலைமுறை நடிகர்களாக இருவரும் வளர்ந்த நேரத்தில் ஒரு கரும்புயலாக நுழைந்தார் மதுரை மண்ணின் மைந்தன் விஜயகாந்த்.

மதுரை மண்ணின் மைந்தன் விஜயராஜ்

மதுரை மண்ணின் மைந்தன் விஜயராஜ்

தமிழ் மண்ணின் மைந்தன் என்கிற தகுதியுடன் 1979 ஆம் ஆண்டு விஜயராஜ் என்கிற அந்த இளைஞர் விஜயகாந்தாக அறிமுகமானார்.நடிகர் ரஜினிகாந்த சாயலுடன் ஆனால் கம்பீரமான கருத்த முரட்டு உருவத்துடன் இருந்த விஜயகாந்த் முரட்டுத்தனமான ஆக்‌ஷன் ஹீரோவானார். அதன் பின்னர் ‘தூரத்து இடிமுழக்கம்’ படம் அவரை திரும்பிப்பார்க்க வைத்தது. அந்த நேரத்தில் தான் தனது படத்திற்கு கதாநாயகனை தேடிக்கொண்டிருந்தார் வித்தியாச இயக்குநரான நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி. படத்தின் பெயர் சட்டம் ஒரு இருட்டறை’. சாமர்த்தியமான இளைஞன் சட்டத்தை மீறி தன் குடும்பத்திற்கு தீங்கிழைத்தவர்களை பழி வாங்குவதுதான் கதை.

வீழ்ந்த விஜயகாந்த வில்லனாக நடிக்க அழைப்பு

வீழ்ந்த விஜயகாந்த வில்லனாக நடிக்க அழைப்பு

எஸ்.ஏ.சி விஜய்காந்த் கூட்டணியில் 1981 ஆம் ஆண்டு வெளியான சட்டம் ஒரு இருட்டறை சக்கைப்போடு போட்டது. ரஜினி, கமலுக்கு மாற்று நாயகனாக பல படங்களை அடுத்து சில ஆண்டுகளில் நடித்த விஜயகாந்த்தின் பல படங்கள் தோல்வியை தழுவின. ஃபீல்டை விட்டு விஜயகாந்த் வெளியேறும் நிலை ஏற்பட்டது. அப்போது அவரை பிரபல நடிகர் படத்தில் வில்லனாக நடிக்க அழைத்தார்கள். விஜயகாந்த் அந்தப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். அதன் பின்னர் எஸ்.ஏ.சி மீண்டும் இணைந்தார் விஜயகாந்த்.

திருப்புமுனை தந்த சாட்சி திரைப்படம், இரண்டாம் இன்னிங்க்ஸ் தொடக்கம்

திருப்புமுனை தந்த சாட்சி திரைப்படம், இரண்டாம் இன்னிங்க்ஸ் தொடக்கம்

விஜய்காந்த் -எஸ்.ஏ.சி கூட்டணியில் மீண்டும் ஒரு படம் 1983 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி இந்த நாள் மிக முக்கியமான நாள். ஆம விஜயகாந்த் தொடங்கிய செகண்ட் இன்னிங்க்ஸ் இன்றைய நாளில் தான் ஆரம்பமானது. அதன் பின்னர் அவர் அவுட் ஆகவே இல்லை. பல செஞ்சுரிகள், டபுள் செஞ்சுரிகள் அடித்து கேப்டனாகவே மாறினார். இதே நாளில் வெளியான சாட்சி திரைப்படம் நன்றாக ஓடியது. விஜயகாந்த் எங்களுக்கு எப்போதும் ஹீரோதான் என தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டனர். சாட்சிப்படத்துக்கு பின்னர் விஜயகாந்த வாழ்க்கை ஏறுமுகம் தான்.

ஏற்றம் தந்த 1984 ஆண்டு ஒரே ஆண்டில் 17 படங்கள்

ஏற்றம் தந்த 1984 ஆண்டு ஒரே ஆண்டில் 17 படங்கள்

1984 ஆம் ஆண்டு விஜயகாந்தின் திரை வாழ்க்கையில் முக்கியமான ஆண்டு. இந்த ஆண்டு மட்டும் அவரது 17 படங்கள் வெளிவந்தன. அதில் வைதேகி காத்திருந்தால் முற்றிலும் புதிய விஜயகாந்தை அடையாளம் காட்டியது. அதற்கு முன் விசுவின் டௌரி கல்யாணம் படத்திலும் வித்தியாசமான வேடம் விஜயகாந்தால் எப்படியும் நடிக்க முடியும் என காட்டியிருந்தது. நாளை உனது நாள், நூறாவது நாள், தீர்ப்பு என் கையில், ஜனவரி 1, வீட்டுக்கொரு கண்ணகி என பல படங்கள் வெளியானது. தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் பல ஹிட் படங்களை கொடுத்தார் விஜயகாந்த். 86 ஆம் ஆண்டில் ஊமை விழிகள், அம்மன் கோயில் கிழக்காலே. 87 ஆம் ஆண்டு கூலிக்காரன் என சாதனைப்படைத்தார்.

உதவி என்றால் அது விஜயகாந்த்

உதவி என்றால் அது விஜயகாந்த்

திரைப்படத்துறையில் வெற்றி, கட்சி அரசியல், எதிர்க்கட்சித்தலைவர் என விஜயகாந்தின் அடுத்தடுத்த வெற்றிப்பயணங்களுக்கு முன்னுரை எழுதியப்படம் சாட்சி இதே நாளில் வெளியானது. எஸ்.ஏ.சி தனக்கு செய்ததற்கு நன்றிக்கடனாக நடிகர் விஜய்யின் அறிமுக காலத்தில் மிகப்பெரிய கதாநாயகனான விஜயகாந்த் கௌரவம் பார்க்காமல் செந்தூரப்பாண்டி என்கிற படத்தில் நடித்துக்கொடுத்தார். அவரால் ஏற்றம் பெற்ற பலர் உண்டு. நடிகர் சரத்குமாரை தனது படத்தில் வில்லனாக நடிக்க வைத்து இரண்டாவது இன்னிங்ஸை துவக்க வைத்தவர். அந்த காலத்தில் திரைப்படகல்லூரியில் பயின்றுவிட்டு வந்த பல கலைஞர்களுக்கு திரையுலக பாதை அமைத்துக்கொடுத்தார். அருண்பாண்டியன், மன்சூர் அலிகானை அறிமுகப்படுத்தினார். உதவி என்றால் மறுபெயர் விஜயகாந்த் என சினிமா வட்டாரத்தில் பெயர் உண்டு, அது சாதாரணமாக வந்ததில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.