கொரோனா மரணங்கள் நிலவரம்..! – உலக சுகாதார நிறுவனம் கூறும் அந்த நல்ல செய்தி..!

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் ஏற்படும் மரணங்கள் குறைந்து வருகின்றன என உலக சுகாதார தலைவர் பேட்டி. உலக மக்களை கொரோனா பெருந்தொற்று பெரிதும் ஆட்டி படைத்து வருகிறது. இதனால் உலகம் முழுதும் உள்ள மக்கள் பெரும் அச்சத்திற்கும் பாதிப்பிற்கும் உள்ளானார்கள். இது உலகம் முழுவது பெரும் தாக்கத்தை ஏற்ப்படுத்தியது.

இதன் விளைவாக உலகம் எங்கிலும் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டு மக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். இது மக்களின் பொருளாதார சூழலையும் பெரிதும் பாதித்தது. இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டடோரின் மொத்த எண்ணிக்கை 61.53 கோடியாக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் 615,399,678 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,523,007 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 594,463,759பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 14,412,912 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன.

இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் ஏற்படும் மரணங்கள் குறைந்து வருகின்றன என உலக சுகாதார தலைவர் தெரிவித்துள்ளார். 2020 மார்ச் மாதத்தை விட தற்போது கொரோனா மரணங்கள் குறைந்து வருவதாக கூறிய அவர், கொரோனாவால் ஏற்பட்ட அச்சுறுத்தல் முடிவுக்கு வருவது போல் உள்ளது. கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆனால் முடிவிற்கு வருவதற்கான அறிகுறி உள்ளது இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் ஏற்படும் மரணங்கள் குறைந்து வருவதாக வெளியான தகவல் உலக மக்களுக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.