தென் மாவட்டங்களுக்கான MSME மாநாடு மதுரையில் துவங்கியது. தமிழ்நாட்டில் தொழிற்துறை வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புக்கும் அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் நிலையில் மதுரையில் நடக்கும் MSME மாநாடு மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.
தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்புக்கும் முதுகெலும்பாக இருப்பது MSME துறை தான்.
இந்த நிலையில் தான் தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தின் நீண்ட கால வளர்ச்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கும் MSME நிறுவனங்களுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுப் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
அடுத்த 2- 3 காலாண்டுகளில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. இந்த 4 பங்குகளை வாங்கி போடுங்க..!
TN TReDS தளம்
மதுரையில் நடக்கும் MSME கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் 13 வங்கிகள் சுமார் 1391 கோடி ரூபாய் கடன் லிமிட் உடன் தமிழ்நாடு வர்த்தக வரவுகள் தள்ளுபடி அமைப்பை (TN TReDS) செயல்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
MSME நிறுவனங்கள்
பொதுவாக MSME நிறுவனங்களுக்கு மூலதனம் தான் பிரச்சனை, இதைச் சரி செய்யும் வகையில் தள்ளுபடி விலையில் உற்பத்தி செய்யப்பட்டு மாற்றுக் கடன் முறைகளைக் கொண்ட தளம் தான் இந்த TN TReDS.
பில் தள்ளுபடி
TREDS என்பது, MSME நிறுவனங்களுக்குப் பில் தள்ளுபடி மூலம் வழங்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு உடனடியாகப் பணம் செலுத்துவதற்கு வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் MSME நிறுவனங்களுக்கான வொர்க் கேப்பிடல் சீரான ஓட்டத்தைத் தருகிறது.
TN TReDS செயல்பாடு முறை
ஒரு விற்பனையாளர் (seller) ஒரு பில்-ஐ TN TReDS தளத்தில் அப்லோடு செய்துவிட்டால், அது ஏற்றுக்கொள்வதற்கு வாங்குபவரிடம் (Buyer) செல்கிறது. இந்த அப்லோடு செய்யப்பட்ட பில்-ஐ வாங்குபவர் ஏற்றுக்கொண்டால் நிதி நிறுவனங்கள் மத்தியில் ஏலத்திற்குச் செல்லும். இதன் மூலம் நிதி நிறுவனங்கள் ஆபத்து காரணிகளை உணர்ந்து குறைவான வட்டியில் கடன் அளிக்கப் போட்டி உருவாகும், இது MSME நிறுவனங்களுக்கு ஜாக்பாட் போன்றது.
கடனுக்கான பேமெண்ட்
கடன் தொகை, வட்டி ஆகியவை ஒப்புதல் அளிக்கப்பட்ட உடனே அடுத்த நாளே பணம் விற்பனையாளரிடம் செல்லும் உற்பத்தி பணிகளைத் துவங்குவதற்காக, இதைப் பொருட்கள் அல்லது சேவையைப் பெறுவோர் நிதி நிறுவனங்களுக்குச் செலுத்துவார்கள், காரணம் தள்ளுபடி விலையில் அளிக்கப்படுவதால்.
ஆர்பிஐ
TReDS பிளாட்பார்ம் ஆப்ரேட்டர்ஸ்-ஐ ஆர்பிஐ-யின் பேமெண்ட் மற்றும் செட்டில்மென்ட் சிஸ்டம்ஸ் விதி 2007 கீழ் அங்கிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது.
அரசு நிறுவனங்கள்
பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் தான் MSME நிறுவனங்களிடம் இருந்து அதிகளவில் பொருட்களை வாங்குவது. எனவே, அரசு நிறுவனங்கள் TREDS இல் இணைந்தால், அது MSME சப்ளையர்களுக்கு வொர்க்கிங் கேப்பிடல் எளிதாக்கும். அத்துடன் இத்தளத்தை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தவும் ஊக்குவிக்கும்.
TN TReds: 13 Banks Announced a Credit Limit of 1391 Crores For the Development of MSME’s
TN TReDS: 13 banks announce a credit limit of INR 1391 crores to implement