திருப்பதி என்றாலே நம் நினைவுக்கு வருவது திருப்பதி ஏழுமலையான் தான்.
மக்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்கள் என அனைத்து தரப்பினரும் திருப்பதி ஏழுமலையான் மீது தீரா நம்பிக்கை இருக்கும் காரணத்தால் வருடத்தில் ஒரு முறையாவது நேரில் சந்தித்து வழிப்படும் வழக்கத்தைக் கொண்டு உள்ளனர்.
சொல்லப்போனால் பல தொழிலதிபர்கள் தங்களின் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தைத் திருப்பதி ஏழுமலையானுக்குக் காணிக்கையாக அளிக்கும் வழக்கத்தையும் கொண்டு உள்ளனர்.
இப்படியிருக்கையில் இந்தியாவின் 2வது பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி வெள்ளிக்கிழமை திருப்பதி வந்துள்ளார்.
1991-ல் பொருளாதார சீர்திருத்தங்கள் அரைகுறையானவை.. நிர்மலா சீதாராமன்!
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி வெள்ளிக்கிழமை சுமார் 1.5 கோடி ரூபாயைப் பணத்தை ஆந்திரா-வில் உள்ள திருப்பதி திருமலை-யில் வெங்கடேஸ்வரா கோயிலுக்கு நன்கொடையாக அளித்துள்ளார்.
திருப்பதி
திருப்பதி மலையில் இருக்கும் பெருமாளை அவ்வப்போது நேரில் சென்று வழிப்பட்டு வரும் முகேஷ் அம்பானி தனது சொத்துக்களையும், வர்த்தகத்தையும் பிள்ளைகள் கையில் ஒப்படைத்த நிலையில் இன்று காலை திருமலை வெங்கடேஸ்வரரை வழிபட்டு 1.5 கோடி ரூபாய் நன்கொடையாக அளித்துள்ளார்.
ராதிகா மெர்ச்சன்ட்
திருப்பதி மலையில் இருக்கும் வெங்கடேஸ்வராரின் தீவிர பக்தரான முகேஷ் அம்பானி, என்கோர் ஹெல்த்கேர் சிஇஓ வீரேன் மெர்ச்சன்ட்-ன் மகள் ராதிகா மெர்ச்சன்ட் (முகேஷ் அம்பானி-யின் வருங்கால மருமகள்) மற்றும் பிற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதிகாரிகள் உடன் வெள்ளிக்கிழமை அதிகாலையில் திருப்பதி கோவிலுக்கு வந்ததுள்ளார்.
1.5 கோடி ரூபாய்
மூலவரை வழிபாட்டிற்குப் பிறகு, முகேஷ் அம்பானி திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் முன்னிலையில் சுமார் 1.5 கோடி ரூபாய்க்கான காசோலையை TTD கூடுதல் செயல் அதிகாரி வெங்கட தர்ம ரெட்டியிடம் கோவிலேயே வழங்கியுள்ளார். ராதிகா மெர்ச்சன்ட் வந்த நிலையில் அவரை மணக்கும் அனந்த் அம்பானி வரவில்லை.
யானைகள்
திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் தங்கிய பிறகு, அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் மற்றும் பலர், வெங்கடேசப் பெருமாளுக்குச் சுமார் ஒரு மணி நேர பூஜை-யில் கலந்து கொண்டனர். மேலும் கோவிலை விட்டு வெளியேறும் முன், அம்பானி கோவிலில் யானைகளுக்கு உணவளித்தார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Mukesh Ambani donates Rs 1.5 crore to Tirupati Venkateswara temple, visit along with Radhika Merchant
Mukesh Ambani donates Rs 1.5 crore to Tirupati Venkateswara temple, visit along with Radhika Merchant