3 இன்ச்-க்காக 6 லட்சம் செலவு செய்யும் டெக் ஊழியர்கள்.. இப்ப இதுதான் டிரெண்ட்..!

உலகளவில் காஸ்மெட்டிக் சர்ஜரி தாக்கம் மக்கள் மத்தியில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, கடந்த சில வருடங்கள் முன் வரையில் பெண்கள் மட்டுமே இதில் இருந்த நிலையில் தற்போது ஆண்களும் அதிகளவில் காஸ்மெட்டிக் சர்ஜரி செய்யத் துவங்கியுள்ளனர்.

குறிப்பாகப் பெரிய நிறுவனங்களில் அதிகச் சம்பளம் வாங்குவோர் தங்களது ப்ரொபஷனல் வாழ்க்கையைத் தொடர்ந்து மேம்படுத்துவது மட்டும் அல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையை மேம்படுத்துவது போல, தங்களுடைய தோற்றத்தை மாற்றிக்கொள்ளும் சர்ஜரி செய்கின்றனர்.

அப்படி ஆண்கள் கடந்த 2 வருடத்தில் அதிகப்படியாகச் செய்துகொண்ட சர்ஜரி என்றால் அது இதை தான்.. எதுன்னுதானே கேட்குறீங்க.. வாங்க சொல்றேன்.

ரூ.1000 முதலீட்டில் தொடங்கப்பட்ட வணிகத்தின் இன்றைய ஆண்டு வருமானம் 4 லட்சம் ரூபாய்.. எப்படி?

காஸ்மெட்டிங் சர்ஜரி

காஸ்மெட்டிங் சர்ஜரி

லாஸ் வேகாஸ்-ல் காஸ்மெட்டிங் சர்ஜரி மருத்துவமனை வைத்திருக்கும் கெவின் தேபிபர்ஷாத் கொரோனா காலத்தில் மிகப்பெரிய அளவில் பிரபலமாகியுள்ளார்.

ஆண்கள்

ஆண்கள்

இவர் செய்யும் ஒரு ஆப்ரேஷன் ஆண்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பைப் பெற்றுள்ளது மட்டும் அல்லாமல் டெக் ஊழியர்களை முக்கிய வாடிக்கையாளர்களாகக் கொண்டு எலைட் டாக்டர் ஆக மாற்றியுள்ளார் கெவின் தேபிபர்ஷாத்.

LimbplastX மருத்துவமனை

LimbplastX மருத்துவமனை

கெவின் தேபிபர்ஷாத் 2016ல் துவங்கி LimbplastX Institute மருத்துவமனையில் கால்களை நீட்டிக்கும் ஒரு முக்கியமான அப்ரேஷனை செய்து வருகிறார். தொடை எலும்புகளில் உலோக Screw வைத்து அவற்றைக் காந்த ரிமோட் கண்ட்ரோல் மூலம் மூன்று மாதங்களுக்கு ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக நீட்டிக்கப்பட்டுக் கால்களின் உயரத்தை அதிகப்படுத்துகிறார்.

கொரோனா காலம்
 

கொரோனா காலம்

இத்தகையைச் சிகிச்சை செய்யச் சில மாதங்கள் தேவைப்படும் என்பதால் கொரோனா காலத்தில் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிகளைச் செய்யும் காரணத்தால் 3 மாதம் வீட்டில் இருந்துகொண்டே பணியாற்றிக்கொண்டும், அதேவேளையில் ஆப்ரேஷன் செய்துகொண்டு உள்ளனர்.

150000 டாலர் வரை

150000 டாலர் வரை

இந்த ஆப்ரேஷன் மூலம் ஒருவரின் உயரத்தை 3,4,5,6 இன்ச் வரையில் உயர்த்த முடியும், இதற்கு 70000 டாலர் முதல் 150000 டாலர் வரையில் செலவாகிறது. காஸ்மெட்டிக் சர்ஜரி என்றாலே காஸ்லி என்பதால் இதுவும் காஸ்ட்லியாகவே உள்ளது.

உயரம் குறைவானவர்கள்

உயரம் குறைவானவர்கள்

இந்தச் சர்ஜரி உயரம் குறைவான இருப்பது குறையாகக் கருதுவோர் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பு பெற்றுள்ளது. குறிப்பாக ஆண்கள் இத்தகையை ஆப்ரேஷன் செய்துகொள்ள விரும்புகின்றனர்.

கெவின் தேபிபர்ஷாத்

கெவின் தேபிபர்ஷாத்

இங்கே லாஸ் வேகாஸ்-ல் 20-க்கும் அதிகமான சாப்ட்வேர் இன்ஜினியர்கள் இப்போது இந்த அப்ரேஷனை செய்துகொண்டு உள்ளனர். பேபால் நிறுவனத்தில் நேற்று ஒரு பெண் இந்த ஆப்ரேஷன் செய்திருந்தால் எனவும் தனக்குக் கூகுள், அமேசான், பேஸ்புக், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனத்தில் இருந்து அதிகப்படியான பேஷன்ட் உள்ளனர் என LimbplastX Institute மருத்துவமனை நிறுவனர் கெவின் தேபிபர்ஷாத் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

New cosmetic surgery is trending among Men, Especially Google, Microsoft, Amazon, Meta employees

New cosmetic surgery is trending among Men the procedure done by LimbplastX Institute founder Kevin Debiparshad is widely popular among tech employees; Especially Google, Microsoft, Amazon, Meta employees

Story first published: Friday, September 16, 2022, 19:02 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.