வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: எஸ்.சி.ஓ. உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகஉஸ்பெஸ்கிஸ்தான் சென்றுள்ள பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர்புடினை சந்தித்து பேசினார்.
எஸ்.சி.ஓ. எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் உச்சி மாநாடு உஸ்பெஸ்கிஸ்தானில் உள்ள சமர்காண்ட்டில் துவங்கியது.
இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க சென்றார்.மாநாடு நடைபெறும் சமர்காண்ட் நகரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு , உக்ரைன் மீதான போர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
மேலும் சீன அதிபர் ஜிஜிங்பிங், மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement