விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க.. நல்ல திட்டம்.. நிலையான வருமானம்..!

பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா என்பது முதியோர்களைப் பாதுகாப்பதற்காகவும், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு (SMF) சமூகப் பாதுகாப்பை வழங்குவதற்காகவும் உருவாக்கப்பட்ட மத்திய அரசு திட்டமாகும்.

இத்திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு 60 வயதை அடைந்த பிறகு குறைந்தபட்சம் 3,000 ரூபாய் ஓய்வூதியத்தைப் பெறுவார் என்பதால் வறுமையில் இருக்கும் பல கோடி விவசாயிகளை இத்திட்டம் மூலம் பலன் பெற முடியும்.

இந்தத் திட்டத்தில் யாரெல்லாம் முதலீடு செய்ய முடியும்..? எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்..? போன்ற அனைத்து விஷயங்களையும் இப்போது பார்ப்போம்.

பங்கு சந்தையில் முதலீடு செய்ய திட்டமா.. 5 கெமிக்கல் பங்குகளை வாங்கலாம்.. நிபுணர்கள் பரிந்துரை

சிறு மற்றும் குறு விவசாயிகள்

சிறு மற்றும் குறு விவசாயிகள்

18 முதல் 40 வயதுக்குட்பட்ட 2 ஹெக்டேர் வரை பயிரிடக்கூடிய நிலம் வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியுடையவர்கள். மேலும் இந்த நில உரிமையாளரின் தரவுகள் மாநில நில உரிமை தரவுகளில் இருக்க வேண்டும்.

மாத வருமான அளவு

மாத வருமான அளவு

இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் விவசாயிகளின் மாத வருமானம் ரூ.15,000 அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும். இதேபோல் ஆதார் அட்டை மற்றும் சேமிப்பு வங்கிக் கணக்கு அல்லது IFSC உடன் ஜன்தன் கணக்குக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

முதலீடு
 

முதலீடு

18 முதல் 40 வயதில் துவங்கி 60 வயதை அடையும் வரையில் இத்திட்டத்தில் ரூ. 55 முதல் ரூ. 200 வரையில் மாதாந்திர அடிப்படையில் முதலீடு செய்ய முடியும். விண்ணப்பதாரர் 60 வயதை அடைந்த பிறகு ஓய்வூதியத் தொகைக்கான கோரிக்கையைச் சமர்ப்பிக்கலாம்.

குடும்ப ஓய்வூதியம்

குடும்ப ஓய்வூதியம்

இதேவேளையில் இத்திட்டத்தில் முதலீடு செய்தவர் எதிர்பாராத விதமாக இறந்தால், பயனாளியின் மனைவிக்கு ஓய்வூதிய தொகையில் 50 சதவீத பணத்தைக் குடும்ப ஓய்வூதியமாகப் பெற உரிமை உண்டு. குடும்ப ஓய்வூதியம் மனைவிக்கு மட்டுமே பொருந்தும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

திட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

திட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

கிசான் மான்-தன் யோஜனாவிற்கு விண்ணப்பிக்க, விவசாயிகள் (விண்ணப்பதாரர்) ஆன்லைனில் அல்லது பல மாநிலங்களில் உள்ள பொதுச் சேவை மையங்கள் வழியாகச் சுய-பதிவு செய்ய வேண்டும். அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் பதிவு செயல்முறை முற்றிலும் இலவசம். இருப்பினும், பொதுச் சேவை மையங்களில் பதிவு செயல்முறை கட்டணமாக ரூ.30/- வசூலிக்கப்படும்.

முக்கிய ஆவணங்கள்

முக்கிய ஆவணங்கள்

கிசான் மான் தன் யோஜனாவில் நுழையும் போது விண்ணப்பதாரர் சமர்ப்பிக்க வேண்டிய முக்கிய ஆவணங்கள் இதுதான்

ஆதார் அட்டை
வங்கி பாஸ்புக் மற்றும் கணக்கு விவரங்கள்
பிறப்புச் சான்றிதழ்
முகவரி ஆதாரம்
பரிந்துரைக்கப்பட்டவரின் விவரங்கள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

PM Kisan Maandhan Yojana: Farmers can get 3000 monthly pension; Check full details

PM Kisan Maandhan Yojana benefits; Farmers can get 3000 monthly pensions; Check full details

Story first published: Friday, September 16, 2022, 19:52 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.