மெகா ஊழல்? பாக்-இல் அணை கட்ட $40 மில்லியன் திரட்டல்.. ஆனால் அதை விளம்பரப்படுத்த $63 மில்லியன் செலவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடே இப்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், அந்நாடு மெகா அணை கட்ட நிதி செலவழித்துள்ளது விவகாரம் சர்ச்சையாகி உள்ளது.

பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலகின் பல நாடுகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. வளர்ந்த நாடுகள் கூட பருவநிலை மாற்றப் பாதிப்புகளில் இருந்து தப்பவில்லை.

அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கடுமையான வெப்பம் ஏற்பட்டுள்ளது. சில நாடுகளில் வெள்ள பாதிப்பு மிக மோசமாக உள்ளது.

வெள்ளம்

நமது அண்டை நாடான பாகிஸ்தானில் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கனமழை பொழிந்து வருகிறது. இதனால் அங்குப் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக, அங்கு சுமார் 50% பகுதிகள் வெள்ளத்தில் மூழ்க்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், வெள்ளத்தைத் தடுப்பு முன்னெச்சரிக்கையில் பாகிஸ்தான் நிதியை எப்படிக் கையாண்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 விளம்பரம்

விளம்பரம்

அதாவது சிந்து நதியில் ஒரு மெகா அணையைக் கட்ட $40 மில்லியன் டாலர் திரட்டி கட்டியது. ஆனால் அந்த அணையை விளம்பரப்படுத்த $63 மில்லியன் செலவழித்தது. இருந்தாலும் கூட சிந்து நதியில் முன்மொழியப்பட்ட அந்த டயமர்-பாஷா அணை, இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை. அணை கட்டுமானத்தில் மிக மெகா ஊழல் நடைபெற்றுள்ளதாக அந்நாட்டின் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சாடியுள்ளனர்.

 என்ன அணை

என்ன அணை

பாக்கிஸ்தான் நாடாளுமன்ற விவகாரக் குழுவின் படி, அணை கட்ட பொதுமக்களிடமிருந்து $40 மில்லியன் திரட்டப்பட்டது.. ஆனால் அதன் விளம்பரத்திற்காக $63 மில்லியன் செலவிடப்பட்டதாக வைஸ் நியூஸ் தெரிவித்துள்ளது. இந்த டயமர்-பாஷா அணை முதலில் 1980களிலேயே கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டது. இருப்பினும், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் அதிகரிக்கும் செலவு போன்ற பல காரணிகள் திட்டம் தாமதமானது. இந்த அணைக் கட்டி முடிக்கப்படும் போது, இதில் இருந்து 4,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும்.

 இம்ரான் கான்

இம்ரான் கான்

2018இல் இதற்காகப் பாகிஸ்தானின் முன்னாள் தலைமை நீதிபதி சாகிப் நிசார் தலைமையில் அணை கட்டுவதற்கு ஒரு பொது நிதியை அமைத்தார்.. இருப்பினும், அதற்கான செலவு பல்வேறு காரணங்களால் 14 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது. இந்தத் திட்டத்திற்கான நிதியைத் திரட்ட பொதுமக்கள் நன்கொடை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். அப்போது பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான், இந்த திட்டத்தை நிறைவேற்றப் பெரியளவில் முயற்சி செய்தார்.

 ஊழல்

ஊழல்

பொதுமக்கள் நிதி அளித்த போதிலும் 2019இல், 6.3 பில்லியன் டாலர் பற்றாக்குறை இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் விஷயம் என்னவென்றால் வசூல் செய்த தொகையில் எதுவும் அணை கட்டுவதற்குச் செலவழிக்கப்படவில்லை. அணை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த நிதி செலவிடப்பட்டதாகக் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்தே ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

 சம்மன்

சம்மன்

பாக்கிஸ்தான் தேசிய சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், அணை நிதிக்காகத் திரட்டப்பட்டதை விட அதிக தொகை விளம்பரத்திற்காகச் செலவிடப்பட்டுள்ளதாகக் கூறினார். இந்த அணையைக் கட்டுவதற்காகப் பொதுமக்கள், கிரிக்கெட் வீரர்கள், இசைக்கலைஞர்கள், ராணுவம் மற்றும் அரசு ஊழியர்களின் நன்கொடை அளித்தனர். மேலும், அணை நிதி தொடர்பாக விளக்கம் அளிக்கப் பாகிஸ்தான் நாடாளுமன்ற விவகாரக் குழு முன்னாள் தலைமை நீதிபதி நிசாருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.