அமெரிக்காவையே மிஞ்சிய சீனா.. இந்தியாவுக்கு எது பெஸ்ட்!

டெல்லி: சீனா அமெரிக்காவினை விஞ்சி இந்தியாவின் மிகச் சிறந்த வர்த்தக பார்ட்னராக, 11.49 பில்லியன் டாலருடன் கடந்த ஜூலை மாதத்தில் முன்னேற்றம் கண்டுள்ளது.

இது குறித்து வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவின் படி, சீனா அமெரிக்காவை விஞ்சி, சீனாவின் மீது வளர்ந்து வரும் நம்பிக்கையை சுட்டிக் காட்டியுள்ளது.

இதே ஜூலையில் அமெரிக்காவின் வர்த்தகமானது 11.08 பில்லியன் டாலராகவும் உள்ளது. இது அமெரிக்காவில் அதிகரித்து வரும் பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில், தேவையும் மெதுவாக குறையத் தொடங்கியுள்ளது.

அமெரிக்க பணவீக்கத்தால் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு, ரூ.3 லட்சம் கோடி இழப்பு..!

சீனாவின் இறக்குமதி அதிகரிப்பு

சீனாவின் இறக்குமதி அதிகரிப்பு

சீனாவுடனான வர்த்தகத்தின் வளர்ச்சியானது மெதுவாக வளர்ச்சி காணத் தொடங்கியுள்ளது. அதேசமயம் அமெரிக்காவின் வணிக வளர்ச்சியானது இந்தியாவுடன் சரியத் தொடங்கியுள்ளது. ஜுலை மாதத்தில் அமெரிக்காவின் ஏற்றுமதி வளர்ச்சி, 0.41% அதிகரித்து, 6.78 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. ஆனால் அதேசமயம் சீனாவில் இருந்து இறக்குமதியானது 45% அதிகரித்து, 10.2 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

சிறந்த வர்த்தக பங்காளி

சிறந்த வர்த்தக பங்காளி

சீனா இந்தியாவின் வர்த்தக பங்காளியாக இருந்ததாக சீன தரவுகள் சுட்டிக் காட்டின. ஆனால் இந்தியா அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அமெரிக்கா தான் இந்தியாவின் சிறந்த வர்த்தக பங்காளியாகவும் கூறியது.

அதனை சுட்டிக் காட்டும் விதமாக ஜூலை 31-வுடன் முடிவடைந்த 4 மாதங்களில் 46.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஏற்றுமதிகளுடன் அமெரிக்கா முதலிடத்திலும், சீனாவின் ஏற்றுமதி 40.4 பில்லியனாகவும் இருந்தது. இதனை ஒப்பிட்டு பார்க்கும்போது, அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக இருந்தது.

 

வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பு
 

வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பு

இதற்கிடையில் சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைந்து வருகின்றது. அதே சமயம் அண்டை நாட்டிற்கான ஏற்றுமதிகள் ஜூலை மாதத்தில் 44% குறைந்து, 1.26 பில்லியன் டாலராக ஜூலை மாதத்தில் குறைந்துள்ளது. இதற்கிடையில் வர்த்தக பற்றாக்குறையானது 9 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. ஏற்றுமதி விகிதமானது. முந்தைய மாதத்தில் சரிவினைக் கண்டுள்ளது.

சீனா - இந்தியா வணிகம்

சீனா – இந்தியா வணிகம்

கடந்த ஏப்ரல் – ஜூலை மாதத்தில் சீனாவுக்கான இந்தியாவில் இருந்து செல்லும் ஏற்றுமதியானது 33% குறைந்துள்ளது. ஆனால் சீனாவில் இருந்து இந்தியாவில் இறக்குமதியானது ஜூலை மாதத்தில் 16% அதிகரித்துள்ளது.

சீனாவில் இருந்து முக்கிய இறக்குமதி பொருட்களில் நிலக்கரி, ஆன்டிபயோடிக், உரங்கள், வெள்ளி மற்றும் வாகன உதிரி பாகங்கள், மின் மாற்றிகள், அச்சிடும் இயந்திரங்கள், வேக்கியூம் பம்ப்ஸ், தொலைபேசிக்கான மின் சாதனங்கள் என பலவும் இறக்குமதி செய்யப்படுகின்றன.

 

வெள்ளி இறக்குமதி

வெள்ளி இறக்குமதி

கடந்த ஜூலை மாதத்தில் 154 மில்லியன் டாலர் மதிப்புள்ள வெள்ளி இறக்குமதி செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 20,000 மடங்கு அதிகமாகும். இதுபோன்ற பல மின்னணு பொருட்களின் இறக்குமதியும் பெரியளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஏசி, வேக்கியூம் பம்ப், பிரிட்ஜ், மோட்டார் வாகனங்கள் என பலவும் இதில் அடங்கும்.

 எது பெஸ்ட்?

எது பெஸ்ட்?

சீனா அமெரிக்கா உடனான வணிகத்தில் இந்தியா ஈடுபட்டு வந்தாலும், இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிப்பதே, இந்தியாவுக்கு சிறந்த ஒன்றாகும். இறக்குமதி அவசியம் தான் என்றாலும், இந்தியாவில் உற்பத்தியினை அதிகரிப்பதும் வர்த்தக பற்றாக்குறையை குறைக்க இந்தியாவுக்கு உதவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

China has overtaken the US as India’s largest trading partner

China overtook US to become India’s largest trading partner with $11.49 billion in July.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.