சென்னை: டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெரும் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான வழக்கில் அக்டோபர் 11-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. காலி மதுபாட்டில்களை திரும்ப பெரும் திட்டம் தொடர்பாக வழக்கறிஞர்களிடம் தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது. பரிசீலித்து அறிக்கை அளிக்க இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் அளித்துள்ளது.