மசால் வடை, மெது வடை, சமோசா பிடிக்குமா..? உஷார் மக்களே..!

சாயங்காலம் வேலைக்கு நடுவில் எடுக்கும் ப்ரேக்கில் ஒரு டீ, சூடா மசால் வடை சாப்பிடுவது பல லட்சம் மக்களின் வாடிக்கையாக இருக்கும், ஆனால் உஷாராக இருப்பது மிகவும் அவசியமாகியுள்ளது.

மாங்கு மாங்கென்று வேலை செய்து பணத்தைச் சேர்ப்பதைக் காட்டிலும் உடல்நலத்தைப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியம் எனக் கடந்த 3 ஆண்டுகளில் மக்கள் கற்றுக்கொண்ட முக்கியமான பாடமாக உள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே பயன்படுத்திய சமையல் எண்ணெய்-ஐ மீண்டும் பயன்படுத்துவது குறித்த ஒரு ஆய்வை இந்திய திங்க் டேங்க் அமைப்பான Observer Research Foundation (ORF) செய்துள்ளது.

இதில் பல முக்கியமான விஷயங்கள் வெளியாகி அதிர்ச்சி அளிக்கிறது. இதனால் இனி நமக்குப் பிடித்த மசால் வடை, மெது வடை, சமோசா போன்றவற்றைக் கூடப் பார்த்து பார்த்து தான் சாப்பிட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

அமெரிக்க பணவீக்கத்தால் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு, ரூ.3 லட்சம் கோடி இழப்பு..!

பயன்படுத்திய சமையல் எண்ணெய்

பயன்படுத்திய சமையல் எண்ணெய்

பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை (யுசிஓ) எந்த வடிவத்திலும் பயன்படுத்தக் கூடாது என்ற தடை உத்தரவு உணவு பாதுகாப்பு விதிமுறைகளில் இருந்தபோதிலும், இந்தியாவில் கிட்டத்தட்ட 60% பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் உணவு சங்கிலியில் திரும்புகிறது என்று அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷன் (ORF) அறிக்கை கூறுகிறது.

மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா

மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா

இந்தியாவில் மும்பை, டெல்லி, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய நான்கு பெருநகரங்களில் உள்ள 505 க்கும் மேற்பட்ட உணவு வணிக ஆப்ரேட்டர்களின் (FBOs) கணக்கெடுப்பின் அடிப்படையில், இதில் 101 பெரிய அளவிலானவர்கள் மற்றும் 406 பேர் சிறிய அளவிலான கடைகளை வைத்துள்ளனர்.

புற்றுநோய், இதய நோய், உறுப்புச் சேதம்
 

புற்றுநோய், இதய நோய், உறுப்புச் சேதம்

விரிவான மருத்துவ மற்றும் அறிவியல் தரவுகள் படி புற்றுநோய், இதய நோய் மற்றும் உறுப்புச் சேதம் உள்ளிட்ட பல நோய்களும் ஏற்பட ஆபத்துக் காரணியாகப் பயன்படுத்திய சமையல் எண்ணெயை (யுசிஓ) பயன்படுத்திச் சமைத்த உணவுகளை உட்கொள்வதைத் தொடர்புடையது என்று ORF அறிக்கை கூறுகிறது.

உணவகங்கள்

உணவகங்கள்

இந்த ஆய்வின் முடிவில் இந்தியாவில் உணவகங்கள் குறிப்பாகச் சிறிய கடைகள், பயன்படுத்திய சமையல் எண்ணெயை திரும்பத் திரும்பப் பயன்படுத்திக் கடைசிச் சொட்டு வரையில் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கிறது. குறிப்பாக டெல்லி, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் இருக்கும் சாலை வியாபாரிகள் அதிகளவில் பயன்படுத்திய சமையல் எண்ணெயை உபயோகிப்பதாகக் கூறுகிறது இந்த ஆய்வு.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Delhi, Kolkata and Mumbai utilise used cooking oil till the last drop says ORF Report

Delhi, Kolkata and Mumbai utilise used cooking oil till the last drop says ORF Report

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.