நவராத்திரி, ஆயுத பூஜை, தீபாவளி என விழாக்காலங்கள் தொடர்ந்து வர உள்ள நிலையில் பலரும் தள்ளுபடி விலையில் பொருட்கள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்த்து வருகின்றனர்.
கொரோனா காலத்திற்குப் பிறகு வர இருக்கும் விழாக்காலம் கோலாகலமாகக் கொண்டாடப்படும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த விழாக்காலங்களில் கார் வாங்க வேண்டும் என்ற கனவில் உள்ளவர்களுக்குக் குறைந்த வட்டி விகிதத்தில் வாகன கடன் வழங்கும் வங்கிகள் பட்டியலை இங்கு பார்க்கலாம்.
செண்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா
பொதுத் துறை வங்கி நிறுவனங்களில் செண்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கி 10 லட்சம் ரூபாய் வரையிலான வாகன கடனுக்கு 7.65 சதவீதம் வட்டி விகிதம் வசூலிக்கப்படுகிறது.
எஸ்பிஐ
இந்தியாவின் மிகப் பெரிய வங்கி நிறுவனமான எஸிபிஐ 10 லட்சம் ரூபாய் வரையிலான வாகன கடனுக்கு 7.9 சதவீதம் வட்டி விகிதம் வசூலிக்கிறது.
ஹெச்.டி.எப்.சி வங்கி
ஹெச்.டி.எப்.சி வங்கி வாகன கடனுக்கு குறைந்தபட்சமாக 7.95 சதவீத வட்டி விகிதம் வசூலிக்கிறது. 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடனுக்கு குறைந்தபட்சமாக 15,561 ரூபாய் தவணை வசூலிக்கப்படுகிறது.
பாங்க் ஆப் பரோடா
ஹெச்.டி.எப்.சி வங்கி போன்று பாங்க் ஆப் பரோடா வங்கியின் வாகன கடனுக்கு குறைந்தபட்சமாக 7.9 சதவீதம் வட்டி வசூல் செய்கிறது.
கரூர் வைஸ்யா வங்கி
கரூர் வைஸ்யா வங்கியில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாகன கடனை 7 ஆண்டுகள் தவணையில் பேற 8 சதவீதம் வட்டி விகிதம் வசூலிக்கப்படுகிறது.
ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கியும் கரூர் வைஸ்யா வங்கி போன்று வாகன கடனுக்கு 8 சதவீத வட்டி விகிதம் வசூல் செய்கிறது.
பஞ்சாப் நேஷ்னல் வங்கி
பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாகன கடனை 7 ஆண்டுகள் தவணையில் பெற்றால் 8.15 சதவீதம் வட்டி விகிதம் வசூலிக்கப்படுகிறது.
பாங்க் ஆப் மகாராஷ்டிரா
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா ஏழு வருட கால அவகாசத்துடன் ரூ.10 லட்சம் கார் கடனுக்கு 8.2 சதவீத வட்டி விகிதத்தை வசூலிக்கிறது. மாதாந்திர கடன் தவணையாக ரூ.15,686 செலுத்த வேண்டும்.
ஆக்சிஸ் வங்கி
தனியார் துறை நிறுவனமான ஆக்சிஸ் வங்கியும் கார் கடன்களுக்கு 8.2 சதவீத வட்டி விகிதத்தில் வழங்குகிறது.
பாங்க் ஆப் இந்தியா
பொதுத் துறை வங்கி நிறுவனமான பாங்க் ஆப் இந்தியா, கார் கடன்கள் 8.25 சதவீத வட்டி விகிதத்தில் வழங்குகிறது. இஎம்ஐ ரூ.15,711 ஆக உள்ளது.
Top 10 Bank Offers Cheapest Car Loans in 2022
குறைந்த வட்டி விகிதத்தில் வாகன கடன் வழங்கும் டாப் 10 வங்கிகள்! | Top 10 Bank Offers Cheapest Car Loans in 2022